குவைட் தம்பதிகள் தாக்கி 5 சுங்க அதிகாரிகள் வைத்தியசாலையில்

0
789
TAMIL NEWS Kuwaiti couple attack customs officials BIA pet dog

(TAMIL NEWS Kuwaiti couple attack customs officials BIA pet dog)

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் சிலர் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குவைத் நாட்டு தம்பதிகள் அவர்களை தாக்கியதில், சுங்க அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது செல்லப் பிராணி நாய் குட்டியை நாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்த போது ஏற்பட்ட வாய்த் தர்க்கம் இறுதியில் கைகலப்பில் முடிந்தது.

இன்று (27) காலை இலங்கைக்கு வருகை தந்த குவைத் நாட்டு தம்பதிகள், இலங்கையின் விலங்கு கட்டுப்பாட்டு ஒழுங்கு முறைக்கு இணங்க எதுவித தயார் நிலையிலும் வரவில்லை என முறையிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பிரதி பணிப்பாளர், பெண் ஊழியர் உள்ளிட்ட 5 சுங்க அதிகாரிகளும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணொளி ஆதாரம் தெரண இணையம்

(TAMIL NEWS Kuwaiti couple attack customs officials BIA pet dog)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites