(TAMIL NEWS president election no suport condidates fonseka)
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் எந்தவொரு பொது வேட்பாளருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சூளுரைத்துள்ளார்.
களனி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு வழங்குவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
குமார் சங்கக்கார விளையாட்டு வீரராக சிறந்த மனிதராக கருதப்படுகிறார்.
இருந்த போதும், அவருக்கு அரசியல் ரீதியாக எந்தவித அனுபவமும் இல்லை.
அவ்வாறான ஒருவருக்கு அரசியலில் ஈடுபடுவது சிரமம் எனவும், தனக்கு அரசியலை கற்றுக்கொள்ள நீண்டகாலம் சென்றதாகவும் சரத் பொன்சேகா பதிலளித்தார்.
எவ்வாறாயினும், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் என்ற வகையில் கட்சியின் தலைமைத்துவத்தை வெற்றி பெறச்செய்ய முன்னிற்பதாகவும், அவ்வாறு இல்லாவிடின் அரசியலில் ஆர்வமுள்ள ஒருவரை கட்சியில் தலைமைத்துவத்தில் முன்னிறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் இருப்பது ஊழல் நிறைந்த அரசியல் கலாச்சாரம் எனவும் தன்னுடைய கொள்கையின் அடிப்படையில் எந்தவொரு பொது வேட்பாளருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(TAMIL NEWS president election no suport condidates fonseka)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கு தண்டனை கைதிகளுக்கு விருந்தளிக்கப் போகும் ஜனாதிபதி..!
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- மொனராகலையில் கொடூரம் : மாணவியை மாறி மாறி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர்கள்
- யாழில் குடும்பத் தலைவன் செய்த செயல் : வயிறு பெருத்து காணப்பட்டதால் நடந்த விபரீதம்