விஜயகலா விசாரணை அறிக்கை இன்று சமர்ப்பிப்பு! பாராளுமன்ற உறுப்புரிமையை இழப்பாரா?

0
529

யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் விஜயகலா மகேஸ்வரன் புலிகள் பற்றி நிகழ்த்திய உரையை அடுத்து, கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சை வெடித்தமை அறிந்ததே. Vijayakala Maheswaran Speech Investigation Report Submission Today

குறித்த கூட்டத்தில் விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக விசாரணை நடத்த ஐதேக குழு ஒன்றை நியமித்தது.

இந்த நான்கு பேர் கொண்ட விசாரணை குழுவின் அறிக்கை, இன்று ஐதேக செயற்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்தக் குழு தமது விசாரணைகளை முடித்துள்ளதாகவும், சிறிகோத்தாவில் இன்று நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் கட்சியின் பொதுச்செயலரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

விஜயகலாவின் உரை தொடர்பாக, விசாரணை நடத்தியுள்ள இந்தக் குழு, அவருக்கு எதிராக கட்சியின் தலைமை எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக இந்த அறிக்கையில் பரிந்துரைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த குழுவின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் விஜயகலா மகேஸ்வரனின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites