யாழில் சுற்றுலா சென்றவர்களை வாள்வெட்டு குழுவென்று மடக்கி பிடித்த பொலிஸாரின் சாதனை!

0
942
Jaffna Police Caught Tourist People Thought Violence Group

யாழ்ப்பாணத்தில் சுற்றுலா சென்ற 19 பேரை வாள்­வெட்­டுக் குழு­வி­னர் என்று நினைத்து பொலிஸார் சுற்றிவளைத்து பிடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. Jaffna Police Caught Tourist People Thought Violence Group

கொடி­கா­மம் வழி­யா­கச் சென்ற படி ரக வாக­னம் ஒன்று வேக­மா­கப் பய­ணித்­தது என்று தெரி­வித்து போக்­கு­வ­ரத்­துப் பொலி­ஸா­ரால் தண்­டப் பத்­தி­ரம் வழங்­கப்­பட்­டது.

சிறிது நேரத்­தில் போக்­கு­வ­ரத்­துக் கட­மை­யில் இருந்த பொலி­ஸா­ரைத் தொடர்பு கொண்ட கொடி­கா­மம் பொலி­ஸார் வாள்­வெட்­டுக் குழு ஒன்று படி ரக வாக­னத்­தில் செல்­கின்­றது அவர்களை மடக்கி பிடியுங்கள் என்று உத்தரவிட்டனர்.

இந்­தத் தக­வ­லைக் கொடி­கா­மம் பொலி­ஸார் மரு­தங்­கோணி மற்­றும் பளைப் பொலி­ஸா­ருக்கு வழங்­கி­யுள்­ள­னர்.

நீண்ட நேரத் தேடு­த­லின் பின்­னர் மரு­தங்­கே­ணில் படி ரக வாக­னம் மடக்­கப்­பட்­டது. அந்த வாக­னத்­தில் இருந்து பொலி­ஸார் கூறி­யது போன்று ஆயு­தங்­கள் மீட்­கப்­ப­ட­வில்லை. அதி­லி­ருந்த 19 பேரும் மரு­தங்­கே­ணிப் பொலிஸ் நிலை­யம் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

அவர்­க­ளில் ஒருர் மட்­டும் தடுத்து வைக்­கப்­பட்­டார். ஏனை­யோர் விடு­விக்­கப்­பட்­ட­னர். தடுத்து வைக்­கப்­பட்­ட­வ­ரும் சிறு குற்­றத் தடுப்­புப் பிரி­வி­ன­ரா­லேயே விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

வழ­மை­யாக முதன்மை வீதி­க­ளில் போக்­கு­வ­ரத்­துப் பொலி­ஸார் உள்­ளிட்ட பொலிஸ் குழு­வி­னர் சோத­னை­க­ளில் ஈடு­ப­டு­கின்­ற­னர். அவற்­றை­யெல்­லாம் தாண்டி வாள்­வெட்­டுக் குழு­வி­னர் முகத்தை மறைத்து, இலக்­க­மில்­லாத மோட்­டார் சைக்­கி­ளில் சுதந்­தி­ர­மா­கச் சென்று அட்­ட­சா­சம் செய்­துள்­ள­னர். இது மக்­கள் மத்­தி­யில் அதி­ருப்­தி­யை­யும், பெரும் விச­னத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதன் காரணமாக கொடி­காமம் பொலி­ஸா­ரு­டைய நட­வ­டிக்கை அதைப் போக்­கு­வ­தற்­காக எடுக்­கப்­பட்ட அவ­சர நட­வ­டிக்­கையோ என்று மக்­கள் சந்­தே­கம் தெரி­வித்­த­னர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites