இங்கிலாந்தில் மூன்று வயது குழந்தை மீது ஆசிட் வீசிய வழக்கில் திடீர் திருப்பமாக ஆசிட் வீச்சுக்கு குறி வைக்கப்பட்டது குழந்தை அல்ல குழந்தையின் தாய் என தெரிய வந்துள்ளதோடு இன்னொரு அதிர்ச்சிக்குரிய காரணமும் தெரியவந்துள்ளது.Acid England father child
ஒர்செஸ்டர் பகுதியில் நடைபெற்ற அந்த அதிர்ச்சி சம்பவத்தை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மூன்று பேர் கைது செய்யப்படனர். அவர்களிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து நான்காவதாக ஒரு 39 வயது நபர் வோல்வெர்ஹாம்டன் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் கைது செய்யப்பட்ட அந்த நபர் ஆசிட் வீசப்பட்ட குழந்தையின் சொந்த தந்தை என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நபருக்கும் குழந்தையின் தாய்க்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்சினைகள் காரணமாக அந்தப் பெண் தனது குழந்தையுடன் வீட்டிலிருந்து வெளியேறி தனது கணவருடைய குடும்பத்தார் யாரும் வசிக்காத பகுதியாகிய ஒர்செஸ்டர் பகுதியில் தனது குழந்தையுடன் மறைந்து வாழ்ந்து வந்துள்ளார்.
அவர் அங்கு வசிப்பதை அவளது கணவனின் குடும்பத்தினர் எப்படியோ அறிந்து கொண்டதையடுத்து இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
குழந்தையின் தாயைக் குறிவைத்து வீசப்பட்ட ஆசிட் தவறுதலாக குழந்தை மீது பட்டதால் அதன் முகமும் கைகளும் எரிந்து போயின. கைது செய்யப்பட்ட நபர்களை பொலிஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரும் கிடர்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர் செய்யப்பட்டனர்.
tags :- Acid England father child
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- விக்கிலீக்ஸ் அசாஞ்சேவை கைது செய்ய பிரிட்டன் முடிவு
- சமையல் மூலம் மன உளைச்சலை குறைத்துகொள்ளும் பிரிட்டன் பிரதமர்
- இங்கிலாந்தில் 3 வயது சிறுவன் மீது ஆசிட் வீச்சு
- மேகன் மெர்க்கல் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு விதிமுறைகள்
- இங்கிலாந்தில் நத்தைகளுக்கான உலக சாம்பியன் போட்டி
- அரைவாசி இதயத்துடன் வாழும் அதிசயக் குழந்தை!