அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சத்தை வழங்கிய வாட்ஸ்அப்

0
742
whatsapp beta android suspicious link detection feature testing

(whatsapp beta android suspicious link detection feature testing)
வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, போலி செய்திகள் பரப்பப்படுவதை குறைக்கவும், ஃபிஷிங், ஸ்பேம் போன்ற தொல்லைகளை தடுக்கவும் புதிய அம்சத்திற்கான சோதனையை வாட்ஸ்அப் சமீபத்தில் தொடங்கியது.

அதன்படி செயலியில் பரப்பப்படும் வலைதள முகவரி போலியானதாக இருப்பின், அதனை வாட்ஸ்அப் சஸ்பீஷியஸ் லின்க் என அடையாளப்படுத்தும். முன்னதாக ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.204 பதிப்பில் மிக குறைந்த அளவு பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த அம்சம் வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.221 வெர்ஷனில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்பதையும் வாட்ஸ்அப் FAQ பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது.

வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.221 வெர்ஷனில் சஸ்பீஷியஸ் லின்க் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் உங்களுக்கு யாரேனும் போலி வலைதள முகவரிகளை பகிர்ந்தால் சஸ்பீஷியஸ் லின்க் என அடையாளப்படுத்தும். இதனால் பயனர்கள் குறிப்பிட்ட முகவரியை (லின்க்-ஐ) க்ளிக் செய்யாமலேயே அறிந்து கொள்ள முடியும். தொடர்ந்து இதனை க்ளிக் செய்யும் பட்சத்தில் ஓபன் லின்க் மற்றும் கோ பேக் இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

சஸ்பீஷியஸ் (suspicious) வார்த்தை டையலாக் பாக்ஸ் வடிவில் அடையாளப்படுத்தப்படுகிறது. புதிய சஸ்பீஷியஸ் லின்க் டிடெக்ஷன் அம்சம் ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் போன் தளங்களில் இதுவரை வழங்கப்படவில்லை. எனினும் இனி வரும் அப்டேட்களில் இந்த அம்சம் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.

whatsapp beta android suspicious link detection feature testing

Tamil News