இலங்கையில் சித்திரவதை பரவலாக நடைமுறையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.(sri lanka torture continue)
அத்துடன், நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுப்பதாக வாக்குறுதியளித்த சீர்திருத்த நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த ஐ.நா விசேட அறிக்கையாளர் பென் எமேர்சன் இலங்கைக்கான தனது விஜயத்தின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இலங்கை தனது நிலைமாற்றுக்கால நீதி குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் எவையும் உண்மையான முன்னேற்றத்தை அடைவதற்கு போதுமானவையாக காணப்படவில்லை.
நல்லிணக்கம் மற்றும் நீதியான நீதித்துறை குறித்த சீர்திருத்தங்கள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. சித்திரவதைகளை பரவலாக பயன்படுத்துபவர்கள் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படும் கலாசாரம் தொடர்கின்றது.
பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக எண்ணிக்கை குறிப்பிடமுடியாத அளவிலானவர்களிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. நான் மிக மோசமான ஈவிரக்கமற்ற சித்திரவதைகள் குறித்து என்னுடைய விஜயத்தின் போது அறிந்து கொண்டேன்.
தடியால் அடித்தல், பெற்றோல் மண்ணெண்ணை நிரம்பிய பிளாஸ்டிக் பையினால் முகத்தை மூடி மூச்சுத் திணறச் செய்தல், நகங்களை பிடுங்குதல், ஊசியால் நகத்தில் குத்துதல் போன்ற சித்திரவதைகள் நடைமுறையில் உள்ளதாக” அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கழிவறைக்குச் சென்ற 60 வயது பெண் பாலியல் துஷ்பிரயோகம்; 38 வயது நபர் கைது
- முதலையுடன் போராடிய நபர் ; திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதி
- பாவனைக்கு உதவாத அரிசி விற்பனை; மோசடிக்காரர் கைது
- கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல்; பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்
- முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்
- கறுப்பு ஜூலை கலவரம்; யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவு நிகழ்வு
- வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:sri lanka torture continue,sri lanka torture continue,sri lanka torture continue,