விக்கிலீக்ஸ் அசாஞ்சேவிற்கு வழங்கப்பட்ட அரசியல் தஞ்சம் ரத்து!!

0
383
Political refuge granted WikiLeaks Assange cancels

45 வயதான விக்கிலீக்ஸ் வலைதள நிறுவனர், அமெரிக்க ராணுவம் தொடர்பான ரகசிய கோப்புகளை அவரது வலைதளத்தில் வெளியிட்ட காரணத்தினால், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க, அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.Political refuge granted WikiLeaks Assange cancels

அமெரிக்காவின் கைது முயற்சிகளுக்கு பயந்து அசாஞ்சே ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகருக்கு தப்பிச் சென்றார். அங்கு அவருக்கு எதிராக பாலியல் வழக்கு பதிவானதால் கைதாவதில் இருந்து தப்பிக்க, 2012ம் ஆண்டு லண்டனிற்கு சென்று அங்குள்ள ஈகுவடார் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் புகுந்தார்.

ஆகவே அவரை எந்த நாட்டினாலும் கடந்த 6 ஆண்டுகளாக கைது செய்ய முடியாத நிலை இருந்து வந்தது.

லண்டனில் கடந்த வெள்ளி அன்று உலக மாற்றுத்திறனாளிகள் மாநாடு இடம்பெற்றது. இதில் ஈகுவடார் அதிபர் லெனின் மோரெனோ கலந்து கொண்டார்.

அங்கு நடைபெற்ற பிரிட்டன் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, அசாஞ்சேவை ஈக்வடார் தூதரகத்தில் இருந்து வெளியேற்றி பிரிட்டனிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

ஒப்புதலின் பிரகாரம் அடுத்த சில தினங்களில் அசாஞ்சேவிற்கு அளிக்கப்பட்டு வந்த அரசியல் தஞ்சம் ரத்து செய்யப்பட்டு, தூதரகத்தை விட்டு வெளியேற்றப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு வெளியேற்றப்பட்டால் ஜாமின் விதிமுறைகளை மீறியதாக பிரிட்டன் அரசு அவரை கைது செய்ய வாய்ப்புகள் இருப்பதோடு, அமெரிக்க ராணுவம் அசாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரவும் வாய்ப்புகள் உள்ளது.

tags :- Political refuge granted WikiLeaks Assange cancels
மேலதிக உலக செய்திகள்eal Iran, Tamil USA news
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்