பாவனைக்கு உதவாத அரிசி விற்பனை; மோசடிக்காரர் கைது

0
831
Unwanted rice sales arrested fraud

பாவனைக்கு உதவாத, காலாவதியான வெள்ளை அரிசியை, அரிசி ஆலையில் வைத்து மீண்டும் சுத்தம் செய்து, சதொசவின் உறைகளில் பொதிசெய்து விற்பனை செய்யும் மோசடியை இபலோகமை பொது சுகாதார அதிகாரிகளினால் கடந்த 20 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (Unwanted rice sales arrested fraud)

இவ்வாறு அரிசி சுத்தம் செய்துகொண்டிருந்த இரண்டு நபர்களையும் சுத்தம் செய்வதற்கு களஞ்சியப்படுத்தி இருந்த 20000 ஆயிரம் கிலோ கிராம் அரிசியும் அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. சுத்தம்செய்து பொதியாக்கப்பட்ட அரிசியின் காலாவதி திகதி 2020 என்றும் அச்சிடப்பட்டிருந்தது.

மேலும், பொதிசெய்து விற்பனைக்குத் தயாராக வைத்திருந்த ஐயாயிரம் அரிசி பொதிகளையும் கைப்பற்றியுள்ளதுடன், குறித்த அரிசி ஆலை முத்திரையிடப்பட்டு மூடப்பட்டுள்ளது.

12 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த அரிசி குருநாகல் பிரதேசத்தில் உள்ள சதொச களஞ்சியசாலையில் இருந்து கண்டி அக்குரனை பிரதேசத்தின் வர்த்தகரின் உதவியுடன் கண்டி பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் அரிசி தொகையும் கெக்கிராவ நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Unwanted rice sales arrested fraud