இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

0
715
Today Horoscope 23-07-2018

இன்று!
விளம்பி வருடம், ஆடி மாதம் 5ம் தேதி, துல்ஹாதா 7ம் தேதி,
21.7.18 சனிக்கிழமை, வளர்பிறை, நவமி திதி மாலை 6:35 வரை;
அதன்பின் தசமி திதி, சுவாதி நட்சத்திரம் மதியம் 2:19 வரை;
அதன்பின் விசாகம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி
பொது : சனீஸ்வரர் வழிபாடு.

.

மேஷம்:

உறவினரிடம் கருத்துவேறுபாடு உருவாகலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.

 

ரிஷபம்:

அன்பால் அனைவரையும் அரவணைப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் தாராள அளவில் பணவரவு கிடைக்கும். பணக்கடனில் ஒருபகுதி அடைபடும். பெண்கள் அக்கம்பக்கத்தினரின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.

மிதுனம்:

எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழிலில் இடையூறுகளை சரிசெய்ய முயல்வீர்கள். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். மின் உபகரணங்களை கவனமுடன் கையாளவும்.

கடகம்:

அன்றாடப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். உறவினர் வருகையால் வீட்டுச் செலவு உயரும். புத்திரரின் செயல்பாடு கண்டு பெருமிதம் உண்டாகும்.

சிம்மம்:

உற்சாகமுடன் செயல்பட்டு வருவீர்கள். இயன்ற அளவில் பிறருக்கு உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் பாராட்டு வெகுமதி பெறுவர்.

கன்னி:

பூர்வபுண்ணிய நற்பலன் துணை நிற்கும். தொழில், வியாபாரம் வியத்தகு வளர்ச்சி பெறும்.உபரி பணவருமானம் வந்து சேரும். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். மனைவி கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார்.

துலாம்:

நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய ஆடம்பர பொருள் வாங்கித் தருவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்:

சூழ்நிலை அறிந்து பேசுவது நல்லது. தொழிலில் உழைப்புக்கேற்ப வருமானம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சீரான வளர்ச்சி காண்பர்.

தனுசு:

எவரிடமும் தற்பெருமை எண்ணத்துடன் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறை தாமதமின்றி சரிசெய்வது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை காப்பது நல்லது. ஆரோக்கியம் பலம் பெறும்.

மகரம்:

இஷ்ட தெய்வ வழிபாட்டால் நன்மை காண்பீர்கள். வெகுநாள் மனதில் இருந்த சஞ்சலம் தீரும்.அதிக உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். லாபம் உயரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கும்பம்:

அவமதித்தவர் அன்பு பாராட்டுகிற நிலை உருவாகும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை படைப்பீர்கள். ஆதாயம் பன்மடங்கு உயரும். மனைவியின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசு வகையில் நன்மை உண்டாகும்

மீனம்:

நண்பரின் செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடு வரலாம்.பொறுமையுடன் செயல்படுவதால் சிரமம் விலகும். வருமானம் மிதமாக இருக்கும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும்..

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்