(tamil news death executioner issue chandrika maithree argument)
இலங்கையில் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ள மரண தண்டனை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
எந்தவொரு நபருக்கும் மரண தண்டனை வழங்க, தானும் இறந்து போன தந்தை பண்டாரநாயக்கவும் எதிர்ப்பு கொள்கையை கொண்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது பாடசாலை கல்வியின் போது கழுவேற்றுவதற்கு எதிராக கட்டுரை எழுதி முதலாவது பரிசை வென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் விற்பனையாளர்களை மாத்திரம் குறிவைத்து மரண தண்டனை செயற்படுத்த வேண்டுமா என்ற கேள்வி தனக்கு எழுந்துள்ளதாக சந்திரிக்கா கூறினார்.
ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை எந்தவொரு தடை வந்தாலும், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எண்ணியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்திருந்தார்.
போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஜனாதிபதி இவ்வாறான நடைமுறையை அமுல்படுத்தியுள்ளார்.
இதற்கு பலரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். அவ்வாறு எதிராக செயற்படுவோர் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டுள்ளவர்களா என சில தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தநிலையில் முன்னாள் மற்றும் சமகால ஜனாதிபதிகளின் மாறுபட்ட கருத்து மோதல்கள் தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக என அரசியல்துறை ஆர்வலளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
(tamil news death executioner issue chandrika maithree argument)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு