அவுஸ்திரேலியாவில் தொழில் தருவதாகக் கூறி பெண்ணொருவர் பணமோசடி

0
538

அவுஸ்திரேலியாவில் தொழில் பெற்றுத் தருவதாகக்கூறி பலரிடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் பணம் மோசடி செய்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். (Woman money laundering)

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவினரால் பத்தரமுல்ல இசுறுபாய, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் பனாகொடை பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவர் என்றும் பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Woman money laundering