உலகின் முதல் முட்டாள் யார்? கூகுளின் பதிலால் பெரும் சர்ச்சை..!

0
850
idiot trump google images search donald trump

(idiot trump google images search donald trump)
இணையத்தளங்கின் அரசன் என்று சொன்னால் அது கூகுள் நிறுவனம்தான். அந்தளவிற்கு மக்களிடையே தம் நம்பகத்தன்மையை நிலைநாட்டியுள்ளது என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் கூகுளின் தேடு பொறி தளத்தின் குறைபாடுகளை பயன்படுத்தி, ‘முட்டாள்’ (idiot) என்று படப்பிரிவில் தேடினால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் படம் தோன்றும்படி சிலர் செய்துள்ளனர்.

இவர்கள் முதலில் ‘ரெட்டிட்’ என்ற இணைய தளத்தில் ஒரு குழுவாக இணைந்து ‘முட்டாள்’ என்ற வார்த்தையை, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் படத்துடன் இணைக்கும் வேலையை தொடர் ஓட்டெடுப்பு மூலம் உருவாக்கினார்கள். இதனை ஒரு ‘ஆன்லைன் போராட்டம்’ என்ற அளவில் அவர்கள் தீவிரத்துடன் நடத்தினார்கள். இதன் விளைவாக கூகுள் உபயோகப்படுத்தும் ‘ அல்காரிதம்’ இந்த தகவல்களை சேகரித்து வைத்துக் கொண்டு, யார் அந்த வார்த்தையை இட்டுத் தேடினாலும் டிரம்பின் படத்தைக் காட்டுகிறது. தற்பொழுது இது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இதேபோல கடந்த மே மாதம் கூகுளின் தேடல் முடிவுகளில் ‘பப்பு’ என்ற இந்தி வார்த்தைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுலின் படமும், ‘பேகு’ என்ற இந்தி வார்த்தைக்கு பிரதமர் மோடியின் படமும் வெளி வந்தது சர்ச்சைக்குள்ளானது. முன்னதாக ஏப்ரல் மாதம் ‘இந்தியாவின் முதல் பிரதமர்’ என்ற கேள்விக்கும் மோடியின் படம் பதிலாக வந்தது. பின்னர் இந்த தவறை அந்நிறுவனம் திருத்திக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

idiot trump google images search donald trump

Tamil News