சிங்கள இனத்தைச் சேர்ந்த தாய் ஒருவருக்கு தமிழ் இளைஞர்கள் செய்த உதவி நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. (Tamil youth helped Sinhalese mother)
உயிரிழந்த தனது மகளின் சடலத்தை அடக்கம் செய்வதற்காகத் தவித்த சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, தமிழ் இளைஞர்கள் தக்க சமயத்தில் உதவியளித்துள்ளனர்.
நுவரெலியாவில் ‘முடிந்தால் யாராவது இந்தச் சடலத்தை அரசாங்கத்தின் செலவில் புதைத்து விடுங்கள், உங்களுக்கு மிகப்பெரிய புண்ணியம் கிடைக்கும். என்னிடம் பேரூந்தில் செல்வதற்கான பணம் மாத்திரே உள்ளது.
என தாய் ஒருவர் தனது மகளின் சடலத்தை வைத்துக்கொண்டு பல மணி நேரம் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்துள்ளார்.
கடுகண்ணாவை பிரதேசத்தை சேர்ந்த 85 வயதான பம்பரந்தே வணிகரத்ன என்ற இந்தத் தாயின் நிலையைக் கண்டு எவரும் மனம் இரங்காத அதேவேளை, அனைவரும் அவரை வேடிக்கை பார்ப்பவர்களாகவே இருந்துள்ளனர்.
உயிரிழந்த பெண், 51 வயதுடைய நிரோசா பெரேரா என்ற உயிரிழந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாயார் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையிலேயே தனது மகளின் சடலத்தை வைத்துக்கொண்டு செய்வதறியாது அந்த தாய் பல மணி நேரம் தவித்து நின்றார்.
இவ்வாறு இருக்கையில் நுவரெலியா மாவட்டம் கந்தப்பளை பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் சிலர், வேறு ஒரு உடலை பெற்றுக் கொள்வதற்காக அந்த வைத்தியசாலைக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது இந்த தாயின் அவல நிலையை அவதானித்துள்ளனர். அந்த தாயின் நிலையினால் மனம் கசிந்த அந்த இளைஞர்கள் அனைவரும் இணைந்து பத்தாயிரம் ரூபாவரை தமக்குள் சேர்த்துக்கொண்டனர்.
இவ்வாறு சேர்த்த பணத்தை குறித்த தாயிடம் கொடுத்ததன் மூலம், அந்த தாய் தனது மகளின் சடலத்தை நல்லடக்கம் செய்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- மஸ்கெலியா வைத்தியசாலையில் தொடரும் அவலம்; நோயாளர்கள் ஆர்ப்பாட்டம்
- மரணதண்டனையால் ஜீஎஸ்பி சலுகை இடைநிறுத்தப்படும் அபாயம்
- சம்பளம் வேண்டாம்; அலுகோசு பதவிக்கு ஒரு கிராம இளைஞர்கள் தயார்
- இலங்கைக்கு கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
- ஆசிரியர்கள் இருவருக்கு இடையில் மோதல்; வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில்
- அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு
- மாணவர்களுக்கு ஹெரோயின் விற்பனை; பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Tamil youth helped Sinhalese mother