(Democratic Unionist Partys Ian Paisley facing 30 day suspension)
வட ஐரிஷ் பாராளுமன்ற உறுப்பினரான ஐன் பைஸ்லி, பிரித்தானிய பாராளுமன்றின் வெஸ்ட் மினிஸ்டர் சபையின் சட்டங்களை மீறி செயற்பட்டமையால் 7 கிழமைகளுக்கு பாராளுமன்ற பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டு ஐன் பைஸ்லி, தனது குடும்பத்தாருடன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
இதற்கான முழுச் செலவான £ 100,000 நிதியை இலங்கை அரசாங்கம் ஏற்றிருந்தது.
இதன் மூலம் பிரித்தானியா பாராளுமன்றின் வெஸ்ட் மினிஸ்டர் சட்டங்களை அவர் மீறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா பாராளுமன்றின் நிலையியற் குழு இதனை கண்டறிந்துள்ளது. இதனை அடுத்து ஐன் பைஸ்லி க்கு 2018 ஆண்டு செப்டம்பர் 4 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 30 பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐன் பைஸ்லிக்கு வழங்கப்பட்டுள்ள 30 அமர்வுகளுக்கான தடை, கடந்த 15 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மிகப்பெரிய தண்டனையாக கருதப்படுகிறது.
இந்தநிலையில், இலங்கை அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களை பெற்று கொண்டமைக்காக சர்ச்சைக்கு முகங்கொடுத்துள்ள பிரித்தானியாவின் ஜனநாயக தொழிற்சங்கவாதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இயன் பெய்ஸ்லி ஜுனியர் மன்னிப்பு கோரியுள்ளார்.
வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த வட அன்றிமிற்கான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் இயன் பெய்ஸ்லி ஜுனியர், இலங்கையின் முன்னைய அரசாங்கத்தின் அனுசரணையில் இரண்டு தடவைகள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதன்பின்னர் 2014 ம் ஆண்டு, இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவிருந்த பிரேரணையை ஆதரவளிக்க வேண்டாம் என்று பிரித்தானியாவின் அப்போதைய பிரதமர் டேவிட் கமரனுக்கு அவர் கடிதத்தையும் அனுப்பி இருந்தார்.
இதுதொடர்பில், விசாரணை நடத்திய பிரித்தானிய நாடாளுமன்றக் குழு அவரை 30 நாட்களுக்கு பாராளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்தியுள்ளதுடன் இந்த உத்தரவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் பாராளுமன்றில் பகிரங்கமாக மன்னிப்பு கோரியதுடன் இந்த விடயத்துக்கு முழுமையான பொறுப்பாளி தாம் என்றும் கூறியதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன
(Democratic Unionist Partys Ian Paisley facing 30 day suspension)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அரசியல்வாதியின் மோட்டார் வாகனம் விபத்து ; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
- 130 க்கும் அதிகமான தமிழர்களை கொன்றுகுவித்த உடும்பன்குள படுகொலை நினைவு தினம்
- மஸ்கெலியா வைத்தியசாலையில் தொடரும் அவலம்; நோயாளர்கள் ஆர்ப்பாட்டம்
- மரணதண்டனையால் ஜீஎஸ்பி சலுகை இடைநிறுத்தப்படும் அபாயம்
- சம்பளம் வேண்டாம்; அலுகோசு பதவிக்கு ஒரு கிராம இளைஞர்கள் தயார்
- இலங்கைக்கு கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
- ஆசிரியர்கள் இருவருக்கு இடையில் மோதல்; வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில்
- அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு
- மாணவர்களுக்கு ஹெரோயின் விற்பனை; பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com