இலங்கையின் வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் மூடப்பட்டு, படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் தினேஸ் குணவர்த்தன கேள்வி எழுப்பினார். Prime Minister Ranil Says No Military Reduction North East
இதற்குப் பதிலளித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இராணுவத்தின் பலத்தைக் குறைக்கப் போவதாக, அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதுபற்றிய உண்மையான நிலைமைகள் குறித்து விளக்கமளிப்பதற்கு, எதிர்க்கட்சியினருடன் கலந்துரையாடுவதற்குத் தாம் விருப்பம் கொண்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க எனக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
சிறிலங்கா இராணுவம், தனது சேவைகளை மட்டுப்படுத்தும் சில யோசனைகளை முன்மொழிந்திருந்தது. அதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
இராணுவத்தை மறுசீரமைக்கும் முடிவு இராணுவத்தினாலேயே எடுக்கப்பட்டது. அதனை நானோ, சிறிலங்கா அதிபரோ எடுக்கவில்லை.
பாதுகாப்பு படைகள் தொடர்பான முடிவுகளை இராணுவ அதிகாரிகளே எடுக்கிறார்கள். அதில் அரசாங்கம் எதுவும் செய்வதில்லை.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிரித்தானிய இராணுவமும் கூட மறுசீரமைப்புச் செய்யப்பட்டது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சிறிலங்கா பாதுகாப்புப் படைகள், முக்கியமான பங்கை வகிக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு அனுமதி
- விகாரையின் உருவம் பதிக்கப்பட்ட ஆடையினால் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்
- அச்சுவேலியில் கம்பிகள், பொல்லுகளுடன் தொடரும் இளைஞர்களின் அட்டகாசம்
- சட்டவிரோத மதுபான வியாபாரிகளை கைதுசெய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை
- மஸ்கெலியா வைத்தியசாலை நோயாளர்கள் பசி, பட்டினியுடன் வீடு திரும்பும் அவலநிலை
- இலங்கைக்கு கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
- 04 வயது சிறுமி இருமியதால் ஆத்திரமடைந்த வைத்தியர்; தாய் மீது தாக்குதல்
- ஐந்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்; 48 வயதுடையவரின் வெறிச்செயல்