முல்லைத்தீவில் கடந்த 500 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று தங்களது தொடர் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். Mullaitivu Missing People Relations 500 Days Protest End
இந்த விடயத்தை முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைப்பின் பிரதிநிதி ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருக்கும் விடயங்களின்படி ,
காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபித்து தருமாறு அரசாங்கத்தினை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களால் முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஒரு வருடத்தை கடந்து இன்று 500 நாட்களை எட்டியுள்ளது.
தமது உயிருக்கும் மேலானவர்களின் வருகைக்காக 500 நாட்களாக கண்ணீருடன் வீதியில் காத்திருந்தும் இதுவரை ஏமாற்றம் மாத்திரமே கிடைத்துள்ளது.
இதன் காரணமாக தொடர் போராட்டத்தை நிறுத்தி ஒவ்வொரு மாதமும் ஒரு தினத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த உத்தேசித்து இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
உறவுகளை தொலைத்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு 500 நாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அரசியல்வாதியின் மோட்டார் வாகனம் விபத்து ; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
- விகாரையின் உருவம் பதிக்கப்பட்ட ஆடையினால் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்
- அச்சுவேலியில் கம்பிகள், பொல்லுகளுடன் தொடரும் இளைஞர்களின் அட்டகாசம்
- சட்டவிரோத மதுபான வியாபாரிகளை கைதுசெய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை
- மஸ்கெலியா வைத்தியசாலை நோயாளர்கள் பசி, பட்டினியுடன் வீடு திரும்பும் அவலநிலை
- இலங்கைக்கு கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
- 04 வயது சிறுமி இருமியதால் ஆத்திரமடைந்த வைத்தியர்; தாய் மீது தாக்குதல்
- ஐந்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்; 48 வயதுடையவரின் வெறிச்செயல்
- மாணவர்களுக்கு ஹெரோயின் விற்பனை; பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது