ஹஜ் யாத்திரிகளிடம் பண மோசடி; நீதிமன்றில் வழக்கு தொடர தீர்மானம்

0
599
money laundering Hajj pilgrimage

ஹஜ் யாத்திரிகளை தவறாக வழிநடத்தி அவர்களிடம் இருந்து 86 மில்லியன் ரூபா பணமோசடி செய்துள்ளதாக ‘ஊழல் எதிர்ப்பு குரல்’ வெளிப்படுத்தியுள்ளது. (money laundering Hajj pilgrimage)

மேலும் இதுதொடர்பான தகவல்கள் சேகரித்து, சில தினங்களுக்குள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாகவும் அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஹஜ் யாத்திரைக்கு 600 யாத்திரிகள் அனுப்புவதாகக் கூறி, ஒரு நபரிடம் இருந்து 150,000 ரூபாவுக்கு அதிகமான பணம் வசூலிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவர்களுக்கு வாக்குறுதியளித்தபடி உணவு மற்றும் தங்குமிட வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் இதற்கு முஸ்லிம் விவகார அமைச்சர் மற்றும் அந்த அமைச்சின் அதிகாரிகளும் நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஹஜ் யாத்திரிகள் தொடர்பாக நீதிமன்றத்தால் செய்து கொடுக்கப்பட்ட வழிகாட்டலுக்கமைய எவுதும் இடம்பெறவில்லை என தெளிவாகியுள்ளதாகவும் யாத்திரிகளின் நீதிக்காக தங்களின் சங்கம் தோன்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த அமைச்சர் இதுதொடர்பாக வேறு அறிக்கைகள் வெளியிடாமல் குறித்த 86 மில்லியன் ரூபா அனுப்பியது யார்?. எப்படி? என்ற இரு கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; money laundering Hajj pilgrimage