யாழ்ப்பாண தொண்டர் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் இனிப்பான செய்தி!

0
755

உரிய தகைமைகளை பூர்த்தி செய்துள்ள 457 தொண்டர் ஆசிரியர்களுக்கு யாழ்ப்பாணத்தில் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். Jaffna volunteer teachers Appointment

எதிர்வரும் 22ஆம் திகதி தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளதாகவும் இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தள்ளார்.

அத்துடன் 2013 ஆம் ஆண்டுக்கு முன்னர் தொண்டர் ஆசிரியர்களுக்குரிய தகைமைகளைப் பூர்த்தி செய்தவர்கள் மற்றும் தொடர்ச்சியாக மூன்றாண்டுகளுக்கு மேல் கடமையாற்றியவர்களின் சேவைகளும் கவனத்திற் கொள்ளப்படவுள்ளதாகவும் இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நியமனங்கள் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites