மது போதையில் நண்பர்களுடன் ரகளை செய்த நடிகருக்கு நேர்ந்த கதி..!

0
383
Bobby Simha drunk police warns

தமிழ் சினிமாவில் “சூதுகவ்வும்” திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகர் பாபி சிம்ஹா, நட்சத்திர ஓட்டலில் மது போதையில் நண்பர்களுடன் ரகளையில் ஈடுபட்டதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.Bobby Simha drunk police warns

அதாவது, கார்த்திக் சுப்புராஜின் ”ஜிகா்தண்டா” படத்தில் சேது எனும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான அவர், ”கோ 2”, ”உறுமீன்”, ”பெங்களூர் நாட்கள்” உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

அதன் பின் நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்த பாபி சிம்ஹாவுக்கு, பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர் தற்போது தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த நடிகராக வளர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சென்னை கிண்டி அருகே உள்ள நட்சத்திர விடுதிக்கு பாபி சிம்ஹாவும், அவரது நண்பா் கருணா என்பவரும் நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளனர். இருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளனர்.

அப்போது கதையை தேர்வு செய்தல், நடிப்பு பற்றி குறை கூறுதல் என இருவருக்குள் தொடங்கிய விவாதம், ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறும் சூழல் ஏற்பட்டது. அவர்களை ஓட்டல் ஊழியர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த பாபி சிம்ஹா ஓட்டல் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஓட்டல் ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட பாபி சிம்ஹாவும், அவரது நண்பரும், போலீசை பார்த்ததும் கப்சிப் என அடங்கி விட்டனர்.

அத்துடன் ஓட்டல் நிர்வாகத்திடமும், ஊழியர்களிடமும் வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இருவரையும் போலீசார் எச்சரித்து ஓட்டுனர்கள் உதவியுடன் காரில் அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார் : மறுப்பு தெரிவித்த ராகவா லாரன்ஸ் – ஸ்ரீகாந்த்..!

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை : மனம் திறந்த விஜய் சேதுபதி..!

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி சுந்தர் சி : அடுத்தது யாரோ என்ற அச்சத்தில் தமிழ் திரையுலகம்..!

ஜீவாவின் திடீர் முடிவு : கலக்கத்தில் ரசிகர்கள்..!

மூன்றே நாட்களில் இத்தனை கோடியா..? : தமிழ்படம் 2 வசூல் நிலவரம்..!

முத்தத்திற்கு மறுத்தேன்.. 3 படங்களை இழந்தேன் : மடோனா செபஸ்டியன் பேட்டி..!

ஜூங்கா படத்தில் ரசிகரை அறிமுகப்படுத்திய விஜய்சேதுபதி..!

சுந்தர் பிச்சை வேடத்தில் விஜய் : சர்கார் பட லேட்டஸ்ட் அப்டேட்..!

நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன் : ஸ்ரீதேவி மகளின் பதிலால் பெரும் பரபரப்பு..!

Tags :-Bobby Simha drunk police warns