(instagram adaptive icons support new alpha update request verification feature)
இன்ஸ்டாகிராம் சேவையை உலகம் முழுக்க சுமார் 80 கோடி பயனர்களுடன் உலகின் இரண்டாவது பெரிய சமூக வலைத்தளமாக இருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 270 கோடி பயனர்களுடன் Facebook தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.
சீரான இடைவெளியில் புதுப்புது அம்சங்களை வழங்கி வரும் இன்ஸ்டாகிராம் சமீபத்தில் ஸ்டிக்கர் மூலம் கேள்விகளை ஸ்டோரியில் கேட்கும் வசதியை அறிமுகம் செய்திருந்தது. தற்சமயம் வெளியாகி இருக்கும் புதிய அப்டேட் இல் அந்நிறுவனம் Adaptive-Icons அம்சத்தை சேர்த்து இருக்கிறது.
இத்துடன் இன்ஸ்டா அக்கவுன்ட்களை மிக எளிமையாக Verify செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவித்துள்ளது. மேலும் Verification செய்வதற்கான விண்ணப்பம் செயலியிலேயே வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.