நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை : மனம் திறந்த விஜய் சேதுபதி..!

0
317
Actors wrong politics Vijay sethupathi open talk

நடிகர் அருண்பாண்டியனுடன் இணைந்து விஜய் சேதுபதியே தயாரித்துள்ள படம் ”ஜூங்கா”. விஜய் சேதுபதி, சாயிஷா, மடோனா செபாஸ்தியன் நடித்துள்ள இப்படத்தை கோகுல் டைரக்ட் செய்துள்ளார். இந்நிலையில், படக் குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.(Actors wrong politics Vijay sethupathi open talk)

அப்போது விஜய் சேதுபதி கூறியதாவது.. :-

”ஜூங்கா படம் சிறப்பாக வந்துள்ளது. நான் கஞ்சத்தனமான தாதாவாக நடித்துள்ளேன். குடும்பத்தோடு ரசிக்கும் நகைச்சுவை படமாக இருக்கும். அதிரடி காட்சிகளும் உள்ளன.

மேலும், நான் தயாரிப்பாளரானது குறித்து கேட்கிறார்கள். திரையுலகில் ஒவ்வொரு நடிகரின் படங்களுக்கும் வியாபார அளவை நிர்ணயம் செய்து கட்டம் கட்டி வைத்துள்ள நிலைமை இருக்கின்றது.

எல்லோரும் படத்தை பார்த்து இருக்கிறார்களே என்று கேட்டால், இல்லை. இவ்வளவுதான் வியாபாரம் என்கிறார்கள். கதைக்கு எவ்வளவு செலவு தேவையோ அதை செய்யாமல் சுருக்கும் நிலையும் உள்ளது.

மக்களுக்கு இந்தப் படம் தான் பிடிக்கும் என்று நாமே முடிவு செய்ய கூடாது. ’நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படம் எடுக்கும் போது தலைப்பு நன்றாக இல்லை என்றனர். ’பீட்சா’ படத்துக்கும் அதையே சொன்னார்கள்.

ஒரு நடிகரின் படத்துக்கு இவ்வளவுதான் செலவு செய்யணும் என்றும் கட்டுப்பாடு வைத்து இருக்கிறார்கள். எனவேதான் நானே எனது படத்துக்கு தயாரிப்பாளரானேன். வசூல் விவரம் வெளிப்படையாக தெரிந்தால் பிரச்சினை இல்லை. அதற்கான முயற்சிகளை தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்து வருவது பாராட்டுக்குரியது.

அத்துடன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரஜினியின் நடிப்பு ஒரு பல்கலைக்கழகம். அந்த பல்கலைக்கழகத்துக்குள் செல்லும் ஒரு மாணவனாக நான் இருக்கிறேன்.

அதுமட்டுமல்லாமல், சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சி வைப்பது குறித்து விமர்சனங்கள் வருகின்றன. புகைப்பிடிப்பது தவறு என்பதில் மாற்று கருத்து இல்லை.

கதாபாத்திரத்தின் தன்மையை சொல்லும்போது அந்த காட்சி தேவையாக இருக்கிறது. வில்லனை ஏன் உருவாக்குகிறீர்கள் என்று கேட்க முடியுமா? நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை’’

இவ்வாறு விஜய்சேதுபதி கூறியுள்ளார்.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

*டூ பீஸ் ஆடையில் கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பியா..!

சாமி ஸ்கொயர் படத்தின் அதிரூபனே.. அதிகாரனே.. சிங்கிள் டிராக் ரிலீஸ்..!

குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!

காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கார்த்தி – சூரி : செம கலாட்டா..! (படங்கள் இணைப்பு)

தமிழ்ப்படம் 2 : திரை விமர்சனம்..!

ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம் : மனதை உறைய வைத்த சம்பவம்..!

பளீச்சென்ற முதுகைக் காட்டி அனைவரையும் பதற வைத்த நடிகை கஸ்தூரி..!

விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

Tags :-Actors wrong politics Vijay sethupathi open talk