நாரஹேன்பிட்டியவில் பெண்ணின் உடம்பை தடவிய பொலிஸ் அதிகாரிகள் அதிரடியாக சிக்கினர்

0
1252
Narahenpita two police officers arrested

நாராஹேன்பிட்டிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பெண்ணொருவருக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். (Narahenpita two police officers arrested)

அத்துடன், நாரஹேன்பிட்டிய பிரதேசத்தில் இரவு மோட்டார் வாகனம் ஒன்றில் இருந்த இளம் ஜோடியிடம் இருந்து பயமுறுத்தி 5000 ரூபா பணத்தை பலவந்தமாக பெற்றுக்கொண்டனர்.

அத்துடன், மோட்டார் வாகனத்தில் இருந்த இளம் பெண்ணை வன்கொடுமை புரிய முயற்சி செய்ததாகவும் குறித்த இருவரும் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.

குறித்த காதல் ஜோடி இரவு 11.15 மணியளவில் மோட்டார் வாகனத்தில் இருக்கும் போது, இந்த இடத்திற்கு சென்ற ரோந்து பொலிஸார் பல்வேறு கேள்விகளைக் கேட்டுவிட்டு பின்னர் இளைஞனிடம் 5000 ரூபா பணம் கேட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த இளைஞனிடம் 1500 ரூபா மாத்திரமே இருந்துள்ளதனால் தனது காதலியை வாகனத்தில் தனியே விட்டு, அருகில் இருந்த ஏடீஎம் இயந்திரத்தில் இருந்து 5000 ரூபா பணம் எடுத்துவந்து கொடுத்துள்ளார்.

பொலிஸார் குறித்த இடத்தை விட்டு சென்ற பின்னர், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது உடம்பை தடவி தொல்லை கொடுத்ததாக இளைஞனின் காதலி இளைஞனிடம் கூறியுள்ளார்.

இருவரும் இந்தச் சம்பவம் தொடர்பாக நாரஹேன்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டின் பேரில் சம்பந்தப்பட்ட இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களையும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இவர்களை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த இளம் ஜோடி நாரஹேன்பிட்டியவிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றி வருபவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Narahenpita two police officers arrested