இராணுவத்தளபதியின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீடிப்பு!

0
410
Maithri Extends Military Commander Mahesh Senanayake Service Period

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. Maithri Extends Military Commander Mahesh Senanayake Service Period

சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கடந்த 2017 ஜூலை 4ஆம் நாள் சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

அவர், எதிர்வரும் ஓகஸ்ட் 19ஆம் நாளுடன் ஓய்வுபெறவிருந்த நிலையிலேயே, இந்த சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2019 ஓகஸ்ட் 19ஆம் நாள் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை