விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்

0
795
Joint opponents Opposition Protest Vijayakala Maheswaran

விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. (Joint opponents Opposition Protest Vijayakala Maheswaran)

அத்துடன், இந்தக் கருத்து தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒன்றிணைந்த எதிரணியினர் இன்றைய தினம் தேங்காய் உடைத்துள்ளனர்.

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை, மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தேங்காய் உடைத்துள்ளனர்.

இதன்பின்னர் குறித்த இடத்தில் சுமார் அரை மணிநேரம் ஒன்றிணைந்த எதிரணியினர் அமைதிப் போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக பாலியல் துஷ்பிரயோகங்கள், வாள்வெட்டுக் கலாசாரம், கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கருத்தினை அடுத்து தென்னிலைங்கை அரசியல் வாதிகள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டதுடன், விஜயகலா மகேஸ்வரன் தனது இராஜாங்க அமைச்சர் பதவியையும் இராஜினாமா செய்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Joint opponents Opposition Protest Vijayakala Maheswaran