கட்டார் டோஹாவில் உள்ள ஸ்டாஃபோர்ட் இலங்கை பாடசாலைக்கு முன்னாள் அதிபர் குமுது பொன்சேகாவிற்கு பதிலாக ரொஷான் சஞ்சேய் பாலசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். (Good News Sri Lankans Qatar)
இந்த பாடசாலைக்கான புதிய கட்டண நிர்மாணப் பணிகள் 3 மாத காலத்துக்குள் ஆரம்பிக்கப்படும் என்று கட்டாரில் உள்ள இலங்கை தூதுவர் ஏ.எஸ்.பி. லியனகே தெரிவித்துள்ளார்.
கட்டார் அரசாங்கம் இலங்கை சமூகத்தின் கல்வியை கருத்திற்கொண்டு துமாமா சந்தியில் 10,000 சதுர மீற்றர் காணியொன்றை வழங்கியுள்ளது.
இந்த நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு அண்மையில் புதிய தலைவரை இந்த பாடசாலைக்கு நியமித்தது.
குறித்த பாடசாலையில் தலைவராக ரொஷான் சஞ்சேய் பாலசூரிய 4 ஆம் திகதி நியமிக்கப்பட்டார். கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பின் மூலம் இந்த நியமனம் இடம்பெற்றது.
தூதரகத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த நியமனம் இடம்பெற்றதாக இந்த தூதுவர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலை சமூக நலனை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதிய தலைவரின் நியமனத்தை அடுத்து இந்த பாடசாலை தூதரகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்டாரில் கணிசமான இலங்கையர்கள் வாழ்ந்துவரும் நிலையில், குறித்த பாடசாலையினால் பலரும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மன்னாரில் இன்றும் மனித எச்சங்கள் மீட்பு
- நோர்வூட்டில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்
- கொழும்பில் விபச்சார விடுதி முற்றுகை; பெண்கள் பலர் கைது
- மூன்று பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை
- விடுதலைப் புலிகள் செயற்பாட்டாளர்களின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா
- சுவிஸில் விடுதலைப் புலிகளுக்கு நிதிசேகரிப்பு நடவடிக்கை; சிங்கள பத்திரிகை தகவல்
- பெண் பொலிஸின் கையை கடித்த கிராம சேவகர்
- மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு அனுமதித்த தாய் பிணையில் விடுவிப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Good News Sri Lankans Qatar