விஜயகலாவின் கருத்து தொடர்பில் பெருமை அடைகின்றேன்; ஞானசார தேரர்

0
1092
Gnanasara thero appreciate Vijayakala Maheswaran

தன் இனத்திற்காக துணிச்சலாக சர்ச்சைக்குரிய கருத்தை முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்டுள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். (Gnanasara thero appreciate Vijayakala Maheswaran)

கன்ததெகட்டிய ஸ்ரீதர்மாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 70 வருடங்களாக நாட்டில் உருவான அனைத்து தலைவர்களும் தம்மை பலவீனப்படுத்தியுள்ளதாகவும் இலங்கைக்கு பொருத்தமான தலைவர் ஒருவர் உருவாகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என பாரிய சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் தான் பெருமை அடைவதாகவும் விஜயகலா தனது இனத்திற்காக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அந்த பெண் தனது இனத்திற்காக முன்நிற்கின்றார். அரசியல்வாதிகள் எங்களை பலவீனப்படுத்துவதை மாத்திரமே செய்தனர். பிரிவினை ஏற்படுத்தினார்கள். இலங்கையை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் எங்களை பலவீனப்படுத்தினார்கள். எனினும் விஜயகலா மகேஸ்வரன் குறித்து பெருமைப்படுகிறேன்.

தான் சிறை வைக்கப்பட்ட பின்னர் இந்த நாட்டின் பல்வேறு பிரதேசங்களின் பிக்குகள், பௌத்த மக்கள் எதிர்ப்பு வெளியிட்டனர். என்னை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.

பௌத்த புத்தரனாக எங்கள் இனம் மற்றும் மதத்தை காப்பாற்ற நாம் முயற்சிக்கின்றோம். எங்களுக்கு சாப்பிடுவதற்கு வாய், வயிறு உள்ளது போன்று, நாடு ஒன்று இருக்க வேண்டும்.

தங்கள் இனத்தை குறித்து நினைத்தே பிரபாகரன் ஆயுதத்தை கையில் எடுத்தார். இந்த நாட்டில் உள்ள தலைவர்களின் செயற்பாடு காரணமாக விஜயகலா போன்ற பெண்கள் எங்கள் தலைவர்களின் தோள்பட்டையிலும் ஏறுவார்கள்.

ம் தியாகம் செய்ய வேண்டும். எங்கள் பிள்ளைகளுக்காக எங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Gnanasara thero appreciate Vijayakala Maheswaran