பணக்கார பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறினார் Facebook நிறுவனர்..!

0
574
zuckerberg tops buffett tech titans dominate wealth ranking

(zuckerberg tops buffett tech titans dominate wealth ranking)
உலக பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை 2.4% உயர்ந்தது. அத்துடன் அந்நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது.

இதன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் அவர் 3வது இடத்துக்குத் தாவியுள்ளார். 3வது இடத்தில் இருந்த வாரன் பஃபெட் தற்போது 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

தற்போது ஜூக்கர்பெக்கின் சொத்து மதிப்பு 81.6 பில்லியன் டாலர். வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு 81.2 பில்லியன் டாலர் ஆகும்.

முதல் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (142 பில்லியன் டாலர்) இருக்கிறார். இரண்டாவது இடத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ் (94.2 பில்லியன் டாலர்) உள்ளார்.

zuckerberg tops buffett tech titans dominate wealth ranking

Tamil News