பிரபல பாடகி கொலை… : சிக்கினார் கணவர்!

0
948
priyani jayasinghe singer death news Tamil

இலங்கையைச் சேர்ந்த பாடகி பிரியானி ஜயசிங்கவின் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த அவரது கணவன் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். priyani jayasinghe singer death news Tamil

51 வயதான பிரியானி ஜயசிங்க நேற்று இரவு, பாணந்துறையில் உள்ள அவரது இல்லத்தில் கூரிய ஆயுதத்தால் (கத்தரிக்கோல்) தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருந்த நிலையில், அவரது கணவர் தலை மறைவாகியிருந்தார்.

இந்த சம்பவம் நேற்று (08) இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் பிரியானி ஜயசிங்கவின் கொலை தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார், அவரின் மரணத்துக்கு காரணம் கணவர்தான் என முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாக இருவரும் மோதலில் ஈடுபட்டு வந்தமையை உறுதிசெய்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் கணவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கணவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

priyani jayasinghe singer death news Tamil, priyani jayasinghe singer death news Tamil, priyani jayasinghe singer death news Tamil