பாடசாலை செல்ல மாட்டோம்; கால்களை ப்ளேட்டால் வெட்டிய மாணவர்கள்

0
633
Prison students refuse goto school

வட்டரக சிறைச்சாலை பாடசாலையில் கல்வி கற்கும் 11 மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு மறுப்புத் தெரிவித்து வருவதுடன், தங்களின் கால்களை கூரிய கத்திகள் மற்றும் ப்ளேட்டினால் வெட்டிக் காயப்படுத்திக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Prison students refuse goto school)

16 – 22 வயதுடைய இந்த இளம் குற்றவாளிகள், 3 வருட சிறைத் தண்டனையைப் பெற்று வருகின்றனர்.

இவர்கள் பாடசாலை கல்விகற்கும் வயதுகளில் உள்ளதனால் கல்வியை மேற்கொள்வதற்கு சிறைச்சாலையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

என்றாலும் பாடசாலையில் சில மாணவர்களால் தொல்லைகள் ஏற்படுவதாகவும், இதனால் தங்களுக்கு பாடசாலைக் கல்வியை விட தொழில் பயிற்சியே தேவைப்படுவதாகவும் கூறி, அவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் 36 இளம் குற்றவாளிகள் கல்வி கற்பதாகவும் இவர்களுக்காக 14 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெட்டுக் காயங்களுடன் இருந்த இந்த இளம் குற்றவாளிகளுக்கு தேவையான சிகிச்சை அளித்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளரின் ஊடகப் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Prison students refuse goto school