கிரிபத்கொட, நாஹேன பகுதியில் முச்சக்கர வண்டியில் இருந்து வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.(Body stab wounds found inside three-wheeler Kiribathgoda)
இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிரிபத்கொட, நாஹேன கெமுனு மாவத்தைக்கு அருகில் உள்ள வீடொன்றில் வைத்து குறித்த நபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹுனுபிட்டிய, நாஹேனவத்த பகுதியை சேர்ந்த 40 வயதுடைய தனுஷ்க தரங்க என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வத்தளை, ஹெந்தல சந்தியில் முச்சக்கர வண்டி ஓட்டுபவர் என்றும் அவருடைய வீட்டிற்கு வந்த இருவரினால் அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கத்தியால் குத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட நபரின் முச்சக்கர வண்டியிலேயே சடலத்தை எடுத்து சென்று குறுக்கு வீதி ஒன்றில் வைத்து விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் சம்பவ இடத்திலேயே சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கிரிபத்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விஜயகலாவின் சர்ச்சை : இராணுவம் அதிரடி முடிவு
- பிரபாகரனை தமிழ் மக்கள் அடித்தே விரட்டுவார்கள் : மனோ
- நவோதய கிருஷ்ணா இன்று காலை சுட்டுக்கொலை : புறக்கோட்டையில் பதற்றம்
- ஜெம்பட்டா வீதியில் கடும் துப்பாக்கிச் சூடு: பெண் உட்பட இருவர் பலி
- யாழில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன்; இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:Body stab wounds found inside three-wheeler Kiribathgoda,Body stab wounds found inside three-wheeler Kiribathgoda,Body stab wounds found inside three-wheeler Kiribathgoda,