விஜயகலா உரையாற்றிய காணொளியை கோருகிறது நீதிமன்றம்…

0
862
vijayakala maheswaran speech video court news

விஜயகலா மகேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தொகுக்கப்படாத காட்சிகள் அடங்கிய காணொளியை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. vijayakala maheswaran speech video court news

குறித்த உத்தரவை கொழும்பு பிரதம நீதவான் ரங்க திசாநாயக்க இன்று (06)பிறப்பி்த்துள்ளார்.

சிங்கள ராவயவின் தேசிய அமைப்பாளரால் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள 5 தொலைக்காட்சி செய்தி சேவைகள் குறித்த தொகுக்கப்படாத காட்சிகள் அடங்கிய காணொளியை குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பாடசாலை சிறுமி ரெஜினா கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் விஜயகலா மகேஸ்வரன் பிரபாகரன் மீண்டும் உருவாக வேண்டும் என தெரிவித்திருந்த கருத்து, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயற்பாடு என குறிப்பிட்டு பல்வேறு தரப்பினர்களும் தங்களது எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

vijayakala maheswaran speech video court news, vijayakala maheswaran speech video court news, vijayakala maheswaran speech video court news