எரிபொருள் விலையை உடனடியாக குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

0
580
president ordered immediate reduction fuel price

நேற்று நள்ளிரவு உயர்த்தப்பட்ட எரிபொருள் விலையை உடனடியாக குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். (president ordered immediate reduction fuel price)

நேற்றைய தினம் இருந்த விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யுமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தது.

இதனையடுத்து, லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனமும் எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளது.

அதற்கமைய ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 137 ரூபாவுக்கும், ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் 148 ரூபாவுக்கும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை109 ரூபாவுக்கும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 119 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; president ordered immediate reduction fuel price