நான் பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறினேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.(vijayakala maheswaran ranil wickramasinghe meeting)
அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்றிரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்து பேசியிருந்தார்.
இதுதொடர்பில் அவரிடம் வினவிய போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு,
வடக்கு மற்றும் கிழக்கில் விடுதலைப் புலிகள் உருவாக வேண்டும் என நான் கூறியது உண்மை தான். ஆறு வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு எமது சமூகத்தில் நடக்கும் இந்த கொடுமைகளை பார்த்துகொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது.
விடுதலைப் புலிகள் காலத்தில் நாம் கட்டுகோப்புடன் சுதந்திரமாக வாழ்ந்தோம். ஆனால் இன்று இந்த நிலைமை முற்றாக மாறியுள்ளது. போதைப்பொருள் பாவனை, கொலை, கொள்ளை, வன்புணர்வு என குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.
மனித படுகொலைகள் இடம்பெற்ற மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்தி ஜனநாயக அரசாங்கத்தை நாம் ஏற்படுத்தினோம். எனினும் இந்த அரசாங்கத்திலும் எமக்கு நீதி கிடைக்கவில்லை.
எமது சமூகத்தில் நடக்கும் அநீதிகளை பார்த்துக்கொண்ட என்னால் அமைதியாக இருக்க முடியாது.
அரசாங்கத்தில் பொறுப்புள்ள அமைச்சராக இருந்துகொண்டு, விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும் என நான் கூறியது அரசியலமைப்புக்கு எதிரானதாகும். கடந்த செவ்வாய்க்கிழமை நான் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது பிரதமர் எனக்கு தொலைபேசி மூலம் அழைப்பு மேற்கொண்டு இந்த விடயம் தொடர்பில் வினவினார்.
நான் சத்தியப்பிரமாணம் செய்து அமைச்சு பதவியை ஏற்றுகொண்டதற்கு அமைய பொறுப்பாக நடக்கவில்லை. நான் செய்தது தவறாகும். நான் எனது பதவியை இராஜினாமா செய்கிறேன். அதற்கான நடவடிக்கைளை நீங்கள் மேற்கொள்ளுங்கள் என நான் பிரதமரிடம் கூறினேன்.
ஆனால் அவர் அதனை ஏற்றுகொள்ளவில்லை. கொழும்புக்கு வந்து நேரில் சந்திக்க சொன்னார். இந்நிலையிலேயே நேற்று பிரதமரை கொழும்பில் சந்தித்தேன். எமது மக்களின் பிரச்சினை தொடர்பிலும் தான் தெரிவித்த கருத்து தொடர்பிலும் எனது நிலைப்பாட்டை பிரதமருக்கு தெரிவித்தேன்.
விசாரணை மேற்கொண்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் கூறினார்.
நான் எனது பதவியை இராஜினாமா செய்ய தயாராகவே இருக்கின்றேன்.
தெற்கில் உள்ள அரசியல்வாதிகள் நான் கூறியதை வைத்து அரசியல் இலாபம் தேடுகின்றனர்.
இவர்களுக்கு பயந்து நான் எனது மக்களுக்காக குரல் கொடுக்காமல் இருக்க மாட்டேன் என்றார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் : விஜயகலா அறைகூவல் (UPDATE 1)
- உடலுறவால் வந்த விபரீதம்; பாட்டியை அடித்துக்கொன்ற பேத்தி; கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்
- யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக வன்புணர்வு
- பதவி விலகுவதாக கூறினேன், பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை :விஜயகலா
- 225 மில்லியன் டொலரை வழங்கி மத்தல விமான நிலையத்தை பங்கு போடுகிறது இந்தியா
- விஜயகலாவின் பூகம்பம் : பிரதமரின் விசேட உரையால் பாராளுமன்றில் பதற்றம்
- விஜயகலாவை கீழ்த்தரமான முறையில் திட்டிய மேர்வின் சில்வா
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:vijayakala maheswaran ranil wickramasinghe meeting,vijayakala maheswaran ranil wickramasinghe meeting,vijayakala maheswaran ranil wickramasinghe meeting,