உருகுவேவை சந்திக்கிறது போர்ச்சுகல்! – நாக் அவுட் சுற்றில் அசத்துவாரா ரொனால்டோ

0
705
tamilnews france meet argentina first knock match fifa world cup

(tamilnews france meet argentina first knock match fifa world cup)
21 வது ஃபிபா உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றுகள் இன்று ஆரம்பமாகின்றன.

இன்று இரவு 11.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் உருகுவேயை சந்திக்கிறது போர்ச்சுகல்.

இதுவரை நாக் அவுட் சுற்றில் கோலடிக்கவில்லை என்ற நிலையை மாற்றி ரொனால்டோ கோலடித்து அசத்துவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

21 வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும். ரஷ்யா, உருகுவே, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், டென்மார்க், குரேஷியா, அர்ஜென்டினா, பிரேசில், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், மெக்சிகோ, பெல்ஜியம், இங்கிலாந்து, கொலம்பியா, ஜப்பான் ஆகியவை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இரவு 11.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான உருகுவேயை சந்திக்கிறது போர்ச்சுகல்.

இரு அணிகளும் முதல் முறையாக உலகக் கோப்பையில் சந்திக்கின்றன. 2014 இல் எப்படி கடந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களில் 2 இல் வென்றது உருகுவே. நாக் அவுட் சுற்றில் வெளியேறியது.

போர்ச்சுகல் அணி தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவுடன் முதல் சுற்றுடன் வெளியேறியது. ரொனால்டோ ஒரு கோல் மட்டுமே அடித்தார்.

இந்த உலகக் கோப்பையில் இந்த உலகக் கோப்பையில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த உருகுவே, லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வென்றது.

எகிப்தை 1-0, சவுதி அரேபியாவை 1-0, ரஷ்யாவை 3-0 என வென்றது. போர்ச்சுகல் 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி, 2 இல் டிரா செய்தது.

முதல் ஆட்டத்தில் ரொனால்டோ ஹாட்ரிக் கோலடிக்க 3-3 என ஸ்பெயினுடன் டிரா செய்தது. மொராக்கோவை 1-0 என்ற வென்றது.

கடைசி ஆட்டத்தில் ஈரானுடன் 1-1 என டிரா செய்தது. கோலடிப்பாரா ரொனால்டோ இந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வென்ற மூன்று அணிகளில் ஒன்றாக முன்னாள் சாம்பியன் உருகுவே உள்ளது.

அதேபோல் எதிர் அணிகளுக்கு கோலடிக்கும் வாய்ப்பை அளிக்காத அணியாகவும் உள்ளது. நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் உள்பட 4 கோல்களை அடித்தாலும், போர்ச்சுகல் அணி வீக்காகவே உள்ளது.

தட்டுத் தடுமாறி நாக் அவுட் முன்னேறியுள்ளது. இதுவரை நாக் அவுட் சுற்றில் ஒரு கோல் கூட ரொனால்டோ அடித்ததில்லை.

இன்றைய ஆட்டத்தில் ரொனால்டோ கோலடித்தார் போர்ச்சுகல் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.

தகவல் மூலம் – tamil.mykhel.com

(tamilnews france meet argentina first knock match fifa world cup)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites