பிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று! : எந்தெந்த அணிகள் மோதுகின்றன? (முழு விபரம்)

0
825
fifa world cup 2018 knockout stage

ரஷ்யாவில் நடைபெற்று வரும் பிபா உலகக்கிண்ண போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக நொக்கவுட் சுற்று நாளை ஆரம்பிக்கவுள்ளது.

கடந்த சில உலகக்கிண்ண வரலாற்றில் முதல் உலகக்கிண்ணத்தின் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகள், அடுத்த உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றிலேயே வெளியேறியிருக்கின்றன.

இந்த வரலாற்றில் பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் அணிகளுடன் இம்முறை துரதிஷ்டவசமாக நடப்பு சம்பியனான ஜேர்மனியும் இணைந்துள்ளது.

எனினும் போட்டிகளை விறுவிறுப்பாக்கக்கூடிய முக்கிய அணிகளும் இம்முறை நொக்கவுட் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.

முதலில் ஐந்து முறை உலகக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ள பிரேசில், தலா இரண்டு முறைகள் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ள ஆர்ஜன்டீனா, உருகுவே மற்றும் தலா ஒவ்வொரு முறைகள் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ள பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து அணிகளும் நொக்கவுட் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.

அத்துடன் இம்முறை எதிரணிகளுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தி வரும் மெக்ஸிகோ, பெல்ஜியம், குரோஷியா மற்றும் ரஷ்ய அணிகளும் பலமான அணிகளாக தங்களை நிலை நிறுத்தியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • நொக்கவுட் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள அணிகளின் விபரம்

பிரான்ஸ், ஆர்ஜன்டீனா, போர்த்துகல், உருகுவே, ஸ்பெயின், ரஷ்யா, குரோஷியா, டென்மார்க், பிரேசில், மெக்ஸிகோ, பெல்ஜியம், ஜப்பான், சுவீடன், சுவிஸ்லாந்து, கொலம்பியா, இங்கிலாந்து

  • நொக்கவுட் சுற்றில் எந்தெந்த அணிகள் மோதுகின்றன…

1. பிரான்ஸ் vs ஆர்ஜன்டீனா –        30/06/2018
2. போர்த்துகல் vs உருகுவே –         30/06/2018
3. ஸ்பெயின் vs ரஷ்யா –                  01/07/2018
4. குரோஷியா vs டென்மார்க் –      01/07/2018
5. பிரேசில் vs மெக்ஸிகோ –            02/07/2018
6. பெல்ஜியம் vs ஜப்பான் –              02/07/2018
7. சுவீடன் vs சுவிஸ்லாந்து –            03/07/2018
8. கொலம்பியா vs இங்கிலாந்து –  03/07/2018

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

fifa world cup 2018 knockout stage, fifa world cup 2018 knockout stage, fifa world cup 2018 knockout stage