வீட்டில் தனியாக இருந்த பிளஸ் 2 மாணவிக்கு நடந்த கொடுமை !!

0
481

(plus 2 student sexual torcher)

திருவண்ணாமலை அருகே வீட்டில் தனியாக படித்துக் கொண்டிருந்த பிளஸ் 2 மாணவியை கொடூரன் ஒருவம் வீடு புகுந்து கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் மல்லிகா. இவர் சமீபத்தில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் பெயிலானதால் தனது அக்கா வீட்டில் தங்கி அடுத்த தேர்விற்காக படித்துக் கொண்டிருந்தார்.

மாணவியின் அக்காள் மற்றும் அவரது கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில்,  அதே பகுதியை சேர்ந்த உதயன் என்பவன்,  வீட்டினுள் புகுந்து  மல்லிகாவை கற்பழித்தான். அதுமட்டுமல்லாமல் , இதனை யாரிடமும் சொல்லக் கூடாது என அந்த பெண்ணிடம் மிரட்டிவிட்டு சென்றுள்ளான்.

இதனையடுத்து பணிமுடிந்து வீட்டிற்கு திரும்பிய தனது அக்காவிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லியுள்ளார் மல்லிகா. அதிர்ந்து போன மல்லிகாவின் சகோதரி இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் , இந்த புகாரின் பேரில் பதுங்கியிருந்த உதயனை கைது செய்துள்ள போலீஸார் அவன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

tags;-plus 2 student sexual torcher

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :