பிபா உலகக்கிண்ணத்தின் இன்றைய முக்கியமான போட்டியில் ஆர்ஜன்டீனாா மற்றும் நைஜீரியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆர்ஜன்டீனா இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே உலகக்கிண்ண வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கவுள்ளது.
ஆர்ஜன்டீனா மற்றும் நைஜீரிய அணிகள் இதற்கு முன் உலகக்கிண்ணத்தில் நான்கு தடவைகள் பலப்பரீட்சை நடத்தியுள்ளன. இதில் 4 தடவைகளும் ஆர்ஜன்டீன அணியே வெற்றிபெற்றுள்ளது.
எனினும் இம்முறை உலகக்கிண்ணத்தை பொருத்தவரையில் ஆர்ஜன்டீன அணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றது.
முதல் போட்டியில் ஐஸ்லாந்து அணியுடனான போட்டியை 1-1 என சமப்படுத்திய ஆர்ஜன்டீனா, இரண்டாவது போட்டியில் குரோஷியாவிடம் 0-3 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்துள்ளது.
டி குழுவில் அங்கம் வகிக்கும் ஆர்ஜன்டீனா இதுவரை ஒரு புள்ளியை மாத்திரம் பெற்று, நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
முதல் இடத்தை ஆறு புள்ளிகளுடன் குரோஷியாவும், நைஜீரியா 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ள நிலையில், முதன்முறையாக உலகக்கிண்ணத்தில் விளையாடி வரும் ஐஸ்லாந்து அணி ஒரு புள்ளியுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் ஆர்ஜன்டீனா வெற்றிபெற்றால் 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது. எனினும் இன்று நடைபெறவுள்ள குரோஷியா அணிக்கெதிரான போட்டியில் ஐஸ்லாந்து அணி வெற்றிபெற்றால் ஆர்ஜன்டீனா அணி மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளப்படும் வாய்ப்புள்ளதுடன், தொடரிலிருந்தும் வெளியேறும்.
ஒருவேளை ஐஸ்லாந்து அணி தோல்வியடைந்து, நைஜீரியா மற்றும் ஆர்ஜன்டீனா அணிகளுக்கிடையிலான போட்டி சமனிலையில் முடிவடைந்தாலும் ஆர்ஜன்டீன அணி உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறுவதுடன், நைஜீரிய அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறி, அடுத்தச் சுற்றுக்கு தகுதிபெறும்.
இதுவரை டி குழுவில் இருந்து குரோஷிய அணி மாத்திரம் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. மீதமுள்ள ஒரு இடத்துக்கு, இன்றைய தினம் ஆர்ஜன்டீனா, ஐஸ்லாந்து மற்றும் நைஜீரிய அணிகள் போட்டிப்போடுகின்றன.
ஆர்ஜன்டீன அணி இதுவரை நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடர்களில் குழுநிலை போட்டியில் வைத்து, ஒரு வெற்றியும் இல்லாமல் வெளியேறியிருக்கவில்லை. எனினும் இன்றைய போட்டியில் ஆர்ஜன்டீனா தோல்வியடைந்தால் அந்த அணியின் மோசமான சாதனையாக இது அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்ஜன்டீனா மற்றும் நைஜீரிய அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டி இலங்கை நேரப்படி இரவு 11.30க்கு நடைபெறவுள்ளது.
<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>
- ஏன் இப்படி செய்தார்? : பாகிஸ்தான் வீரர் செய்த மோசமான செயல்!!!
- உச்சகட்ட சோதனைக்கு ஆளாக்கப்பட்ட அவுஸ்திரேலியா!!! : ஏன் தெரியுமா?
- சதத்தை தவறவிட்ட குசால் மெண்டிஸ்! : பலமான நிலையில் இலங்கை!!!
- சந்திமால் உண்மையில் பந்தை சேதப்படுத்தினாரா? : வெளியாகிய முக்கிய தகவல்!!!
- இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் ராயுடு!!!
- மோசமான சாதனையை சொந்தமாக்கிய பிரபல அணிகள்!!!
- பந்தை சேதப்படுத்தி சிக்கிக்கொண்ட சந்திமால்… : ஐசிசியின் அதிரடி நடவடிக்கை!!!
- உலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இரண்டு அணிகள் : எந்தெந்த அணிகள்?
<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>
Argentina vs Nigeria world cup 2018, Argentina vs Nigeria world cup 2018, Argentina vs Nigeria world cup 2018