(tamilnews 72 hours resettle affected natural disaster victims)
கடந்த மாதங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 72 மணித்தியாலங்களில் தீர்வை பெற்றுக் கொடுத்ததாக நீர்பாசன, நீர்முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ ராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
அவசிமாயன அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்வதற்கு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதன் ஊடாக இந்த பிரதிபலன் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஹப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவில் தம்பேதென்ன கிராமத்தில் 65 குடும்பங்களுக்கான வீடமைப்பு திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் டிந்த கருத்துக்களை வெளியிட்டார்.
பதுளை – வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இதல்கஸ்ஹின்ன பிரதேச செயலாளர் பிரிவில் அனர்த்தங்களுக்கு உள்ளான 43 குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் காரணமாக தம்பேதென்ன பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.
அவர்களின் தற்போதைய நிலைமைகளை ஆராய்ந்த ராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வீடமைப்பு திட்டம் கடந்த வாரம் அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது அமைச்சர் புகையிரதத்திலும் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.
(tamilnews 72 hours resettle affected natural disaster victims)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பறந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவர் மரணம்
- யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே கத்திக்குத்து – இரண்டு பேர் கவலைக்கிடம்
- சிறுத்தையை கொன்றவர்களுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
- சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பினால் உடனடியாக அறிவிக்கவும்
- “நீதியரசர் பேசுகிறார்” – சீ.வி.விக்கியின் நூல் வெளியீட்டில் கூட்டமைப்பின் முரண்பட்ட உறுப்பினர்களும் பங்கேற்பு
- 150 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து – சாரதியும் உதவியாளரும் படுகாயம்
- வன்முறை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாகாது: பிரதமர் மோடி
- பசுமைச் சாலை; ஹெக்டேருக்கு ரூ.9 கோடி இழப்பீடு என்பது ஏமாற்று வேலை: ராமதாஸ்
- 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் – சென்னை சிறுவன் சாதனை!
- 2050 ஆம் ஆண்டில் இறக்குமதி பொருட்கள் நிறுத்தம்! – விரைவில் சட்டங்கள் தயாராகும்!
- நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் கால்பந்து விளையாட்டரங்கில் பெண்களுக்கு அனுமதி
- அர்ஜென்டினாவிற்குள் கால் பதிக்க முடியாதா? மாரடோனாவின் எச்சரிக்கை பலிக்குமா
- இலங்கை கிரிக்கெட் அணியில் இரு யாழ். இளைஞர்கள் : குவியும் பாராட்டு
- குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் ஜிம்பாப்வே ஜனாதிபதி
- 14 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீதான தடை : பாராளுமன்றில் முழங்கிய மஹிந்த
- ஞானசார தேரரை விடுதலை செய்தமைக்கான காரணம் இதுதான்..!