ரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே!!!

0
687
Russia vs Uruguve fifa world cup 2018

பிபா உலகக்கிண்ணத் தொடரின் இன்றைய முதல் போட்டியில் உருகுவே அணி, போட்டியை நடத்தும் ரஷ்ய அணியை 3-0 என வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பமாகிய இந்த போட்டியில் ஆரம்பம் முதல் உருகுவே அணி தங்களது ஆதிக்கத்தை செலுத்தியது.

போட்டியின் முதல் கோலை உருகுவே அணியின் சுவாரேஷ் 10வது நிமிடத்தில் அடித்து, ரஷ்ய அணியை 0-1 என பின்னடையச் செய்தார்.

தொடர்ந்து அபாரமாக ஆடிய உருகுவே அணி, ரஷ்ய அணியின் வாய்ப்புகளை கட்டுப்படுத்தியது. அத்துடன் தங்களது கோல் வாய்ப்புகளையும் அதிகரித்துக்கொண்டு விளையாடியது.

இதன்போது போட்டியின் 23 நிமிடத்தில் உருகுவே அணி மீண்டும் கோலடிக்க எடுத்த வாய்ப்பை ரஷ்ய அணியின் செரீஷெவ் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எனினும் செரீஷேவின் முயற்சி தோல்வியடைய அவர் மூலமாக எதிரணிக்கு மற்றுமொரு கோல் வழங்கப்பட்டது.

இதனால் 2-0 என உருகுவே அணி முன்னேற, ரஷ்ய அணி தங்களது வாய்ப்பை அதிகரிக்க முயற்சித்தது. இதில் ரஷ்ய அணியின் டிபெண்டர் ஸ்மோலிங்கோவ் 28வது மற்றும் 36வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு மஞ்சல் அட்டைகளை பெற்றதால், சிவப்பு அட்டைக்காட்டப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

ரஷ்ய அணிக்கு மோசமாக ஆரம்பித்த முதற்பாதியில் உருகுவே அணி 2-0 என முன்னிலை வகித்தது.

தொடர்ந்து ஆரம்பித்த இரண்டாவது பாதியில் உருகுவே அணி தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இரண்டு அணிகளாலும் கோல்களை பெறமுடியவில்லை.

இரண்டு அணிகளிலும் வீரர்களின் மாற்றங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்துக்கொண்டிருந்த போதும், கோல்கள் பெறும் வாய்ப்புகள் கிடைக்கப்பெறவில்லை.

போட்டியில் மேலதிக நேரம் வழங்கப்பட்டும் ரஷ்ய அணியால் ஒரு கோலையும் அடிக்க முயவில்லை. எனினும் உருகுவே அணிசார்பில் கவானி 90 (+1) நிமிடத்தில் மேலுமொரு கொலை பெற்றுக்கொடுத்தார்.

இதனால் போட்டியில் உருகுவே அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை பதிவுசெய்தது.

இதன்படி உருகுவே அணி ஏ குழுவில் 9 புள்ளிகளுடன் ரஷ்ய அணியை புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளதுடன், ரஷ்ய அணி 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Russia vs Uruguve fifa world cup 2018, Russia vs Uruguve fifa world cup 2018, Russia vs Uruguve fifa world cup 2018