முதலில் அர்ஜென்டினா! அடுத்தது நைஜீரியா! அதிர்ச்சி வைத்தியத்துடன் தயாராகும் ஐஸ்லாந்து

0
548
tamilnews lose Argentina lose Nigeria mass winning island

(tamilnews lose Argentina lose Nigeria mass winning island)

21 வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்றில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் ஆரம்பமாகியது.

இந்த உலகக் கோப்பையின் 25 வது ஆட்டத்தில் டி பிரிவில் நைஜீரியாவை சந்திக்கிறது ஐஸ்லாந்து.

21 வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் இடம்பெற்று வருகின்றன.

பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன.

போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.
அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டாவது ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.
ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா ஆகிய அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இந்த நிலையில் டி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஐஸ்லாந்து, நைஜீரியா விளையாடுகின்றன.

பிரிவு டி ஐஸ்லாந்து – நைஜீரியா போட்டி நடக்கும் நேரம் – இந்திய நேரப்படி இரவு 8.30 மணி —- டி பிரிவில் இதுவரை… * அர்ஜென்டினா 1-1 என ஐஸ்லாந்துடன் டிரா செய்தது. * குரேஷியா 2-0 என நைஜீரியாவை வென்றது.

* குரேஷியா 3-0 என அர்ஜென்டினாவை வென்றது. டி பிரிவின் புள்ளிப் பட்டியலில் குரேஷியா 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

அர்ஜென்டினா, ஐஸ்லாந்து தலா ஒரு புள்ளியுடன் உள்ளன. நைஜீரியா புள்ளி ஏதும் பெறவில்லை.

இந்த உலகக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மும்மூர்த்திகளாக அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, போர்ச்சுகல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரேசிலின் நெய்மர் உள்ளனர்.

அதனால் இந்த அணிகள் விளையாடும் ஆட்டங்களுக்கு தனி ஈர்ப்பு உள்ளது.

(tamilnews lose Argentina lose Nigeria mass winning island)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை