கொழும்பு கொட்டாஞ்சேனையில் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் தொடர்பில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. (Planned assassination Jaffna woman Colombo)
யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய குறித்த பெண், கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப் பெண்ணாகப் பணியாற்றி வந்த நிலையில், கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த நபர்களே இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாக சந்தேகம் வெளியிடும் பொலிஸார், கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
படுகொலை செய்யப்பட்ட பெண் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இந்த பெண் வேலை செய்யும் வீட்டில் வைத்தே கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் கழுத்தில் கத்தியால் குத்தியே கொலை செய்யப்பட்டதாகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவர்களே இந்த கொலையை செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து கொழும்பு – கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், யாழ். கோப்பாய் பொலிஸாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பெண்ணை கொலை செய்த கத்தி குறித்த வீட்டில் இருந்ததா? அல்லது கொலை செய்யப்பட்டவர்களால் கொண்டு வரப்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
tags :- Planned assassination Jaffna woman Colombo
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை!
- வீடியோ: லைகா மொபைல், போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு துணை போகும் நிறுவனமா?
- ஞானசார தேரருக்கு அரைக் காற்சட்டையே வழங்கப்படும்; தனியான சலுகை வழங்கப்பட மாட்டாது
- மக்காவின் புனித தன்மைக்கு களங்கம் விளைவித்த நபர்!
- துரத்தி துரத்தி சுட்டுக் கொன்றோம்; உளறிய கருணா அம்மான்
- இணையத்தளத்தில் வெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்
- தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி; வவுனியாவில் சம்பவம்
- வவுனியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றம் சுமத்தப்பட்டவர் போலி வைத்தியரே
-
Tamil News Group websites