பிபா உலகக்கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற எச் குழுவுக்கான இரண்டாவது போட்டியில் செனகல் அணி 1-0 என வெற்றிபெற்றுள்ளது.
உலகக்கிண்ணத்தை பொருத்தவரையில் செனகல் மற்றும் போலந்து அணிகள் முதன்முறையாக இன்று நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தின.
போலந்து அணியானது, உலகக்கிண்ணத்தில் தாங்கள் எதிர்கொண்ட ஆபிரிக்க அணியுடன் இதுவரையில் தோல்வியை சந்திக்காத பெருமையுடன் இன்று களமிறங்கியது.
இதுவரை 3 போட்டிகளி்ல் ஆபிரிக்க அணிகளை எதிர்கொண்டுள்ள போலந்து அணி ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளதுடன், இரண்டு போட்டிகளை சமப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் செனகல் அணியை எதிர்கொண்ட போலந்து அணிக்கு முதற்பாதியில் மிகப்பெரிய ஏமாற்றம் தான் காத்துக்கொண்டிருந்தது.
இரண்டு அணிகளும் எடுத்த முயற்சிகள் ஆரம்பத்தில் கட்டுப்படுத்தப்பட, போட்டி விறுவிறுப்பானது. எந்த அணி முதலில் கோலடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையில் அதிகமானது.
இதன்படி போலந்து அணியின் வரலாற்றை மாற்றிய செனகல் அணி தங்களது முதலாவது கோலை 37வது நிமிடத்தில் பதிவுசெய்தது. எனினும் குறித்த கோலை செனகல் அணி அடிக்கவில்லை.
எதிரணி வீரர்கள் அடிக்க முற்பட்ட கோலை, போலந்து அணியின் டியாகோ சினெக் தடுக்க முற்பட்டபோது, பந்து தவறுதலாக தங்களது கோலுக்குள் புகுத்தப்பட்டது. இதனால் முதல் கோலை செனகல் அணி எதிரணியிடமிருந்து பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து கொல்கள் இன்றி போட்டி நகர, முதற்பாதியில் செனகல் அணி 1-0 என முன்னிலைப்பெற்றது.
பின்னர் ஆரம்பித்த இரண்டாவது பாதியில் முன்னிலையை ஆயுதமாக பயன்படுத்திக்கொண்ட செனகல் அணி, மீண்டுமொரு கோலை அடித்து முன்னிலையை 2-1 என உயர்த்தியது.
60வது நிமிடத்தில் செனகல் அணியின் பெயே நியாங் இந்த கோலை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
இந்நிலையில் போட்டியில் முன்னேறுவதற்காக போராடிய போலந்து அணி 86வது நிமிடத்தில் கிரெஷகோர்ஷ் கிரிசோவியாகின் உதவியுடன் கோலடித்த போதிலும், போட்டியில் 1-2 என தோல்வியடைந்தது.
இதன்படி இம்முறை உலகக்கிண்ணத்தின் முதலாவது வெற்றியை செனகல் அணி பதிவுசெய்துள்ளதுடன், ஆபிரிக்க அணியொன்றுடன் உலகக்கிண்ணத்தில் போலந்து அணி முதல் தடவையாக தோல்வியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>
- உச்சகட்ட சோதனைக்கு ஆளாக்கப்பட்ட அவுஸ்திரேலியா!!! : ஏன் தெரியுமா?
- சதத்தை தவறவிட்ட குசால் மெண்டிஸ்! : பலமான நிலையில் இலங்கை!!!
- சந்திமால் உண்மையில் பந்தை சேதப்படுத்தினாரா? : வெளியாகிய முக்கிய தகவல்!!!
- இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் ராயுடு!!!
- மோசமான சாதனையை சொந்தமாக்கிய பிரபல அணிகள்!!!
<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>
Poland vs Senegal FIFA World Cup 2018, Poland vs Senegal FIFA World Cup 2018,Poland vs Senegal FIFA World Cup 2018