துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி 33 பேர் பலி; களத்தில் கொழும்பு விசேட பிரிவினர்

0
479
33 people shot dead

இந்த ஆண்டின் இதுவரையான ஐந்து மாத காலப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி 33 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். (33 people shot dead)

இந்த நிலையில், 24 கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 17 பேரை கொழும்பு குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பாதாள உலக குழு தலைவர்களான மாகந்துர மதுஸ், அங்கொட லொக்கா, கெசல்வத்த தினுக, துனகஹ சஞ்சீவ மற்றும் சமயங் ஆகியோருக்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பில் விசேட பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

tags :- 33 people shot dead

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites