மெதிரிகிரிய கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றில் இரண்டு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறை தீர்ப்பதற்கு சென்ற இரு ஆசிரியர்கள், மாணவன் ஒருவனை தடியாலும், கையாலும் தாக்கியதால் காயமுற்ற மாணவன் மெதிரிகிரிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். (authors act teachers Student hospital)
இந்த மாணவனை தாக்கிய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், ஏனைய ஆசிரியரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் மாணவனின் கையிலும், காலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தப் பாடசாலையில் 12 ஆம் தரத்திலும் 13 ஆம் தரத்திலும் கல்வி கற்கும் மாணவர்கள் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போது, அங்குசென்ற துணை அதிபர் இந்த மோதலை தீர்த்து மாணவர்களை தங்களின் வகுப்பறைகளுக்கு அனுப்பியுள்ளார்.
சிறிது நேரத்தில் 13 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனை பாடசாலை அதிபரின் அறைக்கு அழைத்துள்ளனர்.
இந்த மாணவன் அதிபரின் அறைக்கு செல்லும் வழியில் வேரொறு ஆசிரியர் இந்த மாணவனை தும்புத்தடியால் தாக்கியுள்ளார்.
மேலும், இன்னொரு ஆசிரியரும் கையால் இந்த மாணவனை தாக்கியுள்ளார். கைது செய்யபட்ட ஆசிரியர் நேற்று ஹின்குரக்கொகொடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
tags :- authors act teachers Student hospital
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டில் சட்டத்தை வலுப்படுத்துவதே குடிமக்களின் பொறுப்பு
- ஹெரோயின் துப்பாக்கியுடன் வெலே சுதாவின் ஆதரவாளர் கைது
- 20 அடி பனை மரத்திலிருந்து விழுந்து குடும்பஸ்தர் தற்கொலை!
- குற்றம் செய்த இராணுவத்தினரை காட்டிகொடுங்கள் : சி.வி. சினம்
- ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளை காப்பாற்ற முடியாத ஜனாதிபதியின் செயல் வேடிக்கையானது
- குற்றவாளி கூண்டில் ஞானசார செய்த செயல் : கோபமடைந்த நீதிபதி
- நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய மஹோற்சவப் பெருவிழா!
- பெண்ணொருவருக்காக மோதிக்கொண்ட ஏழு இளைஞர்கள்; கம்பளையில் சம்பவம்
- ஞானசார தேரருக்கு வெள்ளை உடை : சட்டம் அனைவருக்கும் சமம்
- பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு சென்ற மாணவிக்கு குழந்தை!
- காலியில் 54 வயதுடைய நபருடன் 28 வயதுடைய பெண் கள்ளத் தொடர்பு : இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
- ஞானசாரவுக்கு அந்த நோயா? : வைத்தியசாலையில் அனுமதிப்பு
- தெற்காசியாவில் இலங்கைப் பெண் விமானிகள் படைத்த சரித்திரம்!!
- விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடி எடுக்கச் சென்ற நால்வர் கைது
- அக்கரப்பத்தனையில் சிறுவர் கடத்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
- நாளை ஈதுல் பித்ர பண்டிகை தினமாக அறிவிப்பு
- ஆசிரிய இடமாற்றத்தின் போது அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் – இராதாகிருஸ்ணன்
- 200 கிலோ கஞ்சாவுடன் மூன்று பேர் கைது – இந்தியரும் சிக்கினார்
- நடுக்கடலில் சிக்கிய 5 மீனவர்கள் – காப்பாற்றிய இலங்கை கடற்படை
- இரண்டாம் கட்டமாக தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவு