இன்றைய ராசி பலன் 15-06-2018

0
878

இன்று!

விளம்பி வருடம், ஆனி மாதம் 1ம் தேதி, ரம்ஜான் 30ம் தேதி,
15.6.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, துவிதியை திதி இரவு 9:26 வரை;
அதன் பின் திரிதியை திதி, திருவாதிரை நட்சத்திரம் மதியம் 2:18 வரை;
அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம், சித்தயோகம்.(Today Horoscope 15-06-2018 )

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : கேட்டை, மூலம்
பொது : சந்திர தரிசனம், மகாலட்சுமி வழிபாடு, கரிநாள்.

மேஷம் :

மனக்குழப்பம் உருவாகி மறையும். நண்பரின் ஆலோசனை நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். சுமாரான வருமானம் கிடைக்கும். வீடு, வாகன பாதுகாப்பில் உரிய கவனம் பின்பற்ற வேண்டும்.

ரிஷபம்:

முக்கிய பணி நிறைவேற தாமதமாகலாம். தொழில், வியாபாரத்தில் சராசரி அளவில் லாபம் இருக்கும். பெண்கள் தேவை அறிந்து செலவு செய்வது நல்லது. சீரான ஓய்வு உடல் ஆரோக்கியம் காக்கும். நண்பரால் உதவி கிடைக்கும்.

மிதுனம்:

நீண்டநாள் தடை விலகும். தொழில், வியாபார வளர்ச்சிக்கான பணியில் ஈடுபடுவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு உயர் பதவி வந்து சேரும். குடும்பத்தினருடன் விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள்.

சிம்மம்:

பேச்சில் நிதானம் பின்பற்றுவது நல்லது. தொழில், வியாபார வளர்ச்சிக்கான வாய்ப்பை பயன்படுத்தவும். பணவரவு சராசரி அளவில் இருக்கும். விலை மதிப்புள்ள பொருளி்ல் கவனமாக கையாளவும். பெற்றோரின் ஆலோசனை நிம்மதியளிக்கும்.

துலாம்:

புதியவர்களின் அறிமுகத்தால் நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க உரிய வாய்ப்பு வரும். வருமானம் உயரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும்.

கன்னி:

சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்தலாம். தொழில், வியாபார நடைமுறை சீராக கூடுதல் பணிபுரிவது அவசியம். பணவரவு சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது.

விருச்சிகம்:

குடும்பத்தேவை ஓரளவு நிறைவேறும். பிறருக்காக வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது நல்லது. கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராகும். கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

தனுசு:

வெற்றிக்கான வாய்ப்பு உண்டாகும். நண்பர்களின் உதவி ஊக்கமளிக்கும். தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும். வரவு, செலவில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும். பிள்ளைகளால் உதவி உண்டு.

மகரம்:

அந்தஸ்தை காப்பதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதமாகலாம். தியானம் மன அமைதி பெற உதவும். பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர்.

கும்பம்:

சாந்த குணத்தால் சாதனை புரிவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மீனம்:

மனதில் நேர்மை எண்ணம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி பணி எளிதாக நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தினர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். சுபசெய்தி வீடு வந்து சேரும்.

மேலும் பல சோதிட தகவல்கள்   

 

Keyword:Today Horoscope 15-06-2018