பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு சென்ற மாணவிக்கு குழந்தை!

0
946
Student Hospital Baby Tangala

தங்காலை பகுதியில் வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காகச் சென்ற மாணவி குழந்தையை பிரசவித்துள்ளார். (Student Hospital Baby Tangala)

ரன்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்றுவரும் 13 வயதுடைய மாணவி பாடசாலையில் திடீரென சுகயீனமடைந்துள்ளார்.

இதனையடுத்து, பாடசாலை ஆசிரியர்களினால் மாணவியின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மாணவியின் சித்தி அவரை பாடசாலையில் இருந்து தங்காலை வைத்தியாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த மாணவி 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது.

எனினும் மாணவி ஆபத்தான நிலையில் இருந்தமையினால் சத்திரசிகிச்சை மேற்கொண்டு குழந்தையும் மாணவியையும் வைத்தியர்கள் காப்பாற்றியுள்ளனர்.

இதுதொடர்பில் வைத்தியசாலை அதிகாரிகள் ஹூங்கம பொலிஸாருக்கு அறிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரன்த காமோதர பிரதேசத்தை சேர்ந்த சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த 55 வயதுடைய சிறுமியின் உறவினரை கைது செய்துள்ளனர்.

tags :- Student Hospital Baby Tangala
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites