கடந்த 2017 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் கண்ணாடியிலான மதில் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வேலைகள், அடுத்த மாத நடுப்பகுதியில் நிறைவுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது. glass wall aroundd Eiffel tower works finish July
ஈஃபிள் கோபுரத்தின் இரண்டு பக்கங்களில் குண்டு துளைக்காத வலுவான கண்ணாடி மதில்களும், இரு பக்கங்களில் இரும்பிலானான மதில்களும் அமைக்கும் பணி துரித கதியில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
6.5mm அடர்த்தியை கொண்ட ஈஃபிள் கோபுரத்தின் மதில்கள் 35 மில்லியன் யூரோக்கள் செலவில் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்படுகிறது.
இது குறித்து ஈஃபிள் கோபுரத்தின் நிர்வாக அமைப்பான SETE இன் தலைவர் Bernard Gaudillère, நேற்று தெரிவிக்கையில், 6.5 mm அகலத்தில் அமைக்கப்படும் இந்த மதில்கள் மிக மிக உறுதியானது எனவும் ஈஃபிளை பாதுகாக்க மிகச்சரியான வழி இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கண்ணாடி மதில்களும், இரும்பு கம்பிகளும் 3.24m எனும் ஒரே அளவை கொண்டிருக்கும். SETE இன் தொழில்நுட்ப வினைஞர் Alain Dumas தெரிவிக்கும் போது, Gustave Eiffel மிக முதன் முதலாக ஈஃபிள் கோபுரத்தை வடிவமைக்கும் போது இதுபோன்ற ஒரு சுற்றுமதிலை வரைந்திருந்தார். அவரின் கனவு தான் இது’ என குறிப்பிட்டார்.
**Most Related Tamil News**
- பிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்!
- பிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!