தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

0
482
Thala Thalapathy Movies Release coming Diwali,Thala Thalapathy Movies Release coming,Thala Thalapathy Movies Release,Thala Thalapathy Movies,Thala Thalapathy

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படமும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படமும், தீபாவளிக்கு வெளியாகுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.(Thala Thalapathy Movies Release coming Diwali)

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

விஜய், அஜித் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இரண்டு படங்களையும் தீபாவளிக்கு கொண்டு வரும் முடிவோடு படக்குழுவினர் ஓய்வில்லாமல் வேலை செய்து வருகிறார்கள். இவற்றின் படப்பிடிப்புகளை பாதிக்கு மேல் முடித்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும், திரையுலகினர் மற்றும் தியேட்டர் அதிபர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளில் தொய்வு ஏற்பட்டது. ஸ்டிரைக்கால் அஜித்குமார் படப்பிடிப்பை தாமதமாகவே தொடங்கினர்.

எனவே இரண்டு படங்களும் தீபாவளிக்கு வருமா? அல்லது தள்ளிப்போகுமா? என்று சந்தேகம் நிலவியது. ஆனால், இரு படங்களும் தீபாவளிக்கு வருவது உறுதி என்று படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

விஜய்க்கு இது 62-வது படம். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இவருக்கும் விஜய்க்குமான கூட்டணி ”துப்பாக்கி”, ”கத்தி” படங்களில் ராசியாக அமைந்தன. அதுபோல் இந்த படத்துக்கும் எதிர்பார்ப்பு உள்ளது.

அரசியல் படமாக தயாராகிறது. ராதாரவியும், பழ கருப்பையாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். இந்த படத்தின் தலைப்பையும், முதல் தோற்றத்தையும் விஜய் பிறந்த நாளான வருகிற 22 ஆம் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

அஜித்குமாருக்கு இது 59-வது படம். விசுவாசம் என்று பெயரிட்டுள்ளனர். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். சிவா டைரக்டு செய்கிறார். அஜித்குமார் – சிவா கூட்டணியில் “வீரம்”, “வேதாளம்”, “விவேகம்” படங்கள் வந்து வரவேற்பை பெற்றன. நான்காவது படத்திலும் இருவரும் இணைந்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்துகின்றனர். மும்பைக்கும் செல்கிறார்கள்.

பழிவாங்கும் கதையம்சத்தில் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது. அஜித், அண்ணன்-தம்பியாக இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் கிசு கிசுக்கப்படுகின்றது.

<MOST RELATED CINEMA NEWS>>

சீரியல் கணவன் மனைவிக்கு இடையேயான நிஜ காதல் : சின்னத் திரையுலகில் கிசுகிசு..!

ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..!

ஸ்ரீரெட்டியின் தொடர் புகார் : வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நானி..!

மேடையில் கதறியழுத ஸ்ரீதேவியின் மகள்கள் : சோகத்தில் திரையுலகம்..!

படுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..!

நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!

பிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..!

தடைகளைத் தாண்டி இணையத்தை கலக்கும் விஸ்வரூம் 2 பட டிரைலர்..!

ஒரு நைட்டுக்கு ரேட் என்ன..? : பிக் பாஸ் பிரபலத்திடம் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய நபர்..!

Tags :-Thala Thalapathy Movies Release coming Diwali

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 14-06-2018