சுவிஸர்லாந்து தடுப்பு முகாமில் இலங்கை பெண் தற்கொலை

0
642
tamilnews sri lankan woman asylum seeker suicide switzerland

சுவிஸர்லாந்தின் பசல் யூனிஸ்பிட்டலில் உள்ள வாகாப் தடுப்பு முகாமில் தங்கியிருந்த பெண்ணொருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் தடுப்பு முகாமில் வைத்து அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

பின்னர் அவர் கவலைக்கிடமான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடும் காயங்களுக்கு உள்ளான அந்த பெண் இரண்டு நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுவிஸ் அரச சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த 29 வயதான குறித்த பெண், சுவிஸர்லாந்தில் புகலிடம் கோரி மேற்கொண்டிருந்த விண்ணப்பம் கடந்த ஆண்டு மே மாதம் நிராகரிக்கப்பட்டது.

டப்ளின் நடைமுறைப்படி மோல்டா குறித்த இலங்கை பெண் தொடர்பாக பொறுப்புக் கூற வேண்டும்.

இதனைத் தொடர்ந்து தப்பிச் செல்ல முயன்ற போது கடந்த சனிக்கிழமை பேர்ன் நகரில் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பெண் கடந்த திங்கட்கிழமை பசல் பிராந்தியத்தில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

(tamilnews sri lankan woman asylum seeker suicide switzerland)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites